»   »  நான் ஒரு ஃபெயிலியர்: இப்படி சொல்ல ஒரு நடிகன் எவ்வளவு நொந்திருக்க வேண்டும்?

நான் ஒரு ஃபெயிலியர்: இப்படி சொல்ல ஒரு நடிகன் எவ்வளவு நொந்திருக்க வேண்டும்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்திக் குமார் நடிப்புக்கு முழுக்கு போடுவதாக அறிவித்துள்ளார். அவரின் 16 ஆண்டு கால காத்திருப்பு பலனிக்காமல் மனம் நொந்து இந்த முடிவை எடுத்துள்ளார்.

2000ம் ஆண்டு வெளியான மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தில் அறிமுகமானவர் கார்த்திக் குமார். முதல் படமே மணிரத்னத்தின் படம் என நம்பிக்கையுடன் கோலிவுட் வந்திருக்கிறார்.

அடுத்ததாக பி.சி. ஸ்ரீராமின் இயக்கத்தில் அதுவும் ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது அவருக்கு.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

முதல் படத்தில் துணை நடிகராக வந்தாலும் அடுத்த படத்திலேயே அதுவும் பி.சி. ஸ்ரீராம் படத்தில் ஹீரோவான கார்த்திக் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. அடுத்த அரவிந்த்சாமி, மாதவன் என்ற அளவுக்கு எதிர்பார்க்கப்பட்டதாக கார்த்திக்கே தெரிவித்துள்ளார்.

சரியில்லை

சரியில்லை

கார்த்திக் ஹீரோவாக நடித்த படம் சரியாக போகவில்லை. அது இருக்கட்டும், சாதிக்கலாம் வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளார். ஆனால் அவருக்கு இரண்டாவது ஹீரோ, குணச்சித்திர வேடம், கவுரவத் தோற்றம் கிடைத்துள்ளது.

விடவில்லை

விடவில்லை

வரும் வாய்ப்பை எல்லாம் தட்டிக்கழித்தால் சினிமாவில் பிழைக்க முடியாது என்று நினைத்த அவர் தனக்கு திறமை இருந்தும் வந்த வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக் கொண்டார். இதனால் ஹீரோ கனவு கனவாகவே ஆகிவிட்டது.

காத்திருப்பு

காத்திருப்பு

எனக்கு திறமை இருக்கிறது. ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்ட கார்த்திக் நிச்சயம் நல்லது நடக்கும் என 16 ஆண்டுகள் காத்திருந்தது தான் மிச்சம். ஒன்றும் நடக்கவில்லை.

ஃபெயிலியர்

ஃபெயிலியர்

நடிப்பில் தோற்றுவிட்டேன். நான் ஒரு ஃபெயிலியர். அதனால் நடிப்புக்கு முழுக்கு போடுகிறேன் என கார்த்திக் அறிவித்துள்ளார். நான் ஒரு ஃபெயிலியர் என்று ஒருவர் அறிவித்துள்ளார் என்றால் அவர் எவ்வளவு வேதனையில் கூறியிருப்பார்.

சினிமா

சினிமா

16 ஆண்டு கால போராட்டத்தை கார்த்திக் முடித்துக் கொண்டுள்ளார். இந்த முடிவை அவர் எளிதில் எடுத்திருக்க மாட்டார். இப்படி ஆயிரம் ஆயிரம் கனவுகளுடன் சினிமாவுக்கு வந்து காணாமல் போகும் கார்த்திக்குகள் எத்தனையோ பேர். அந்த வேதனை பட்டியலில் கார்த்திக்கின் பெயரும் சேர்ந்துள்ளது.

English summary
Karthik Kumar who has quit acting says he is a failure. He should have been in extreme pain to say that word failure.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil