twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் சேதுபதிக்கு மரியாதை கிடைத்த மேடையில் எனக்கு அவார்ட்.. பெருமையா இருக்கு..இயக்குநர் பெருமிதம்!

    |

    சென்னை: சமீபகாலமாக வருகிற எந்தப் படத்தைப் பார்த்தாலும் வெட்டு, குத்து, ரத்தம் என்று மனித உயிரை மலிவாகக் காட்டும் வகையில் காட்சிகள் வருவது சகஜமாகி வருகிறது.

    இந்த நிலையில் உயிரின் விலை மதிப்பற்றது. மனிதன் ஒருவனின் உயிரை எடுக்க யாருக்கும் உரிமையோ அதிகாரமோ கிடையாது என்கிற கருத்தை வலியுறுத்தும் வகையில் வித்தியாசமான யாரும் சொல்லாத கோணத்தில் உருவாகியுள்ள படம் தான் '21 கிராம்ஸ்'.

    இந்தப் படத்தை யான் சசி இயக்கி உள்ளார். அவர் ஏற்கெனவே சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

    தந்தைக்காக பாடல்.. 3 விருதுகளை பெற்ற நா.முத்துக்குமார்…விருதைப் பெற்றுக்கொண்ட மகனும், மகளும் தந்தைக்காக பாடல்.. 3 விருதுகளை பெற்ற நா.முத்துக்குமார்…விருதைப் பெற்றுக்கொண்ட மகனும், மகளும்

    சிறந்த படக்குழு

    சிறந்த படக்குழு

    21 கிராம்ஸ் படத்தில் கதாநாயகனாக மோகணேஷ் என்கிற அறிமுக நடிகர் நடித்துள்ளார். சமீபத்தில் காலமான குணச்சித்திர நடிகர் பூ ராமு ஓர் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சௌந்தர்ராஜன், அன்பு டென்னிஸ் ஆகிய இருவர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்த இருவருக்கும் சில படங்களிலும் இணைய தொடர்களிலும் விளம்பரப் படங்களிலும் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு இசையமைத்துள்ள விஜய் சித்தார்த், ராக்கி புகழ் நடிகர் வசந்த் ரவி நடித்துள்ள புதிய படத்திற்கு இசையமைத்து வருகிறார். அந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

    படத்தின் கருவை உருவாகிவிட்டோம்

    படத்தின் கருவை உருவாகிவிட்டோம்

    இந்தப் படம் பற்றிய அனுபவத்தை இயக்குநர் யான் சசி கூறும் போது, "முழு நீளத்திரைப்படம் இயக்குவது தான் எனது கனவு . அப்படி நான் ஒரு படத்திற்காகப் பேசி ஒரு பெரிய நிறுவனத்தால் எனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. படம் துவங்க வேண்டிய நேரத்தில் கொரோனா காலம் வந்து விட்டது. தாமதமாகிக் கொண்டே வந்தது. இடையில் ஏதாவது செய்யலாம் என்று ஒரு சிறு முயற்சியாக 15 நிமிடத்தில் ஓடக்கூடிய ஒரு பைலட் பிலிம் போல் இதை உருவாக்குவது எனத் திட்டமிட்டேன். ஆனால் அதன் கதை வளர்ந்து விரிவாகி, அந்தக் கதை தானே பெருக்கிக் கொண்டு ஒரு முழு நீளப் படமாக 52 நிமிடங்களில் ஓடக்கூடிய படமாக உருமாறி உருவாகியுள்ளது.

    4 விருதுகள் கிடைத்தது

    4 விருதுகள் கிடைத்தது

    நான் எடுத்துக்கொண்ட கதை அதன் வீரியத்தால் பல பிரச்சினைகளைத் தாண்டி முழுப் படமாக வடிவம் பெற்றுவிட்டது. அதைப் திரையிட்டுக் காட்டிய போது அனைவரும் இப்படிக் கூட இதைச் சொல்ல முடியுமா என்று வியந்து பாராட்டியது எனக்கு சந்தோசமாக இருந்தது. திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிய போது பல இடங்களில் விருதுகளைப் பெற்றுள்ளது. கல்கட்டா சர்வதேச கல்ட்டு திரைப்பட விழாவில் இப்படத்திற்கு சிறந்த படம், சிறந்த நடிகர் , சிறந்த இயக்குநர்,சிறந்த ஒளிப்பதிவு என மொத்தம் நான்கு விருதுகளைப் பெற்றது. அந்தத் திரைப்பட விழாவில் தான் விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்திற்கும் விருதுகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    சிறந்த நடிகருக்கான விருது

    சிறந்த நடிகருக்கான விருது

    தாகூர் சர்வதேச திரைப்பட விழா, சிங்கப்பூர் திரைப்பட விழா, டோக்கியோ, இத்தாலி ரோம்,அமெரிக்கன் கோல்டன் பிக்சர்ஸ் திரைப்பட விழாக்கள் என்று சர்வதேச திரைப்பட விழாக்களில் இதுவரை 17 விருதுகள் இந்த படத்திற்கு கிடைத்திருக்கின்றன. 52 நிமிடங்களில் ஒரு முழு படத்திற்கான திருப்தியை இப்படம் பார்வையாளர்களுக்கு வழங்கும் வகையில் படத்தை உருவாக்கி உள்ளோம். இப்படத்தில் அறிமுகம் கதாநாயகனுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது .இந்தப் படத்தில் இன்னொரு கதாநாயகனாக நடித்துள்ள பூ ராமு அவர்களின் நடிப்பும் பேசப்படும் என்று தங்களுக்கு கிடைத்த அங்கீகாரத்தை பற்றி பெருமையாக பேசியுள்ளார் இயக்குநர் யான் சசி.

    English summary
    Director Yaan Sasi After Receiving Award: சமீபகாலமாக வருகிற எந்தப் படத்தைப் பார்த்தாலும் வெட்டு, குத்து, ரத்தம் என்று மனித உயிரை மலிவாகக் காட்டும் வகையில் காட்சிகள் வருவது சகஜமாகி வருகிறது. இந்த நிலையில் உயிரின் விலை மதிப்பற்றது. மனிதன் ஒருவனின் உயிரை எடுக்க யாருக்கும் உரிமையோ அதிகாரமோ கிடையாது என்கிற கருத்தை வலியுறுத்தும் வகையில் வித்தியாசமான யாரும் சொல்லாத கோணத்தில் உருவாகியுள்ள படம் தான் '21 கிராம்ஸ்'.இந்தப் படத்தை யான் சசி இயக்கி உள்ளார். அவர் ஏற்கெனவே சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X