For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மொபைல் போனுக்கோ ஆப்களுக்கோ நான் அடிக்ட் கிடையாது - சுனைனா

|
Likes வாங்க என்னவெல்லாம் பண்ணறாங்க | 'Finger Tip' Preview Press Meet

சென்னை: நான் ஒன்றும் மொபைல் ஃபோனுக்கோ அல்லது அதில் உள்ள ஆப்களுக்கோ அடிமை கிடையாது. அன்றாடம் நடப்பவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் காரணமாகத்தான் ட்விட்டர் பார்ப்பேன் என்று ஃபிங்கர்டிப் வெப் சீரிஸில் நடிக்கும் நடிகை சுனைனா கூறினார்.

Zee5 நிறுவனம் தயாரிக்கும் ஃபிங்கர்டிப் வெப் சீரிஸில் நடிக்கும் நடிகை சுனைனா நம்முடைய ஃபிலிமி பீட்டுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது சில முக்கிய விசயங்களை பகிர்ந்து கொண்டார்.

சாதாரண டிவி சீரியலுக்கும் வெப் சீரிஸுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் ஒன்றுமில்லை. டிவி சீரியல் மாதிரிதான் வெப் சீரிஸையும் எடுக்கின்றனர். கால்ஷீட்டிலும் எந்தவிதமான குளறுபடியும் நடப்பதில்லை.

பப்ஜி விரிவாக்கம் என்ன?: கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கேட்ட அமிதாப், உங்களுக்கு தெரியுமா?

ட்விட்டர் டிரெண்ட்

ட்விட்டர் டிரெண்ட்

நான் பெரும்பாலும் காலையில் கண் விழித்தவுடன் பார்ப்பது அநேகமாக ட்விட்டர்தான். அதைத்தான் ஒரு செய்தித்தாள் மாதிரி பார்க்கிறேன். இதில் தான் இன்றைக்கு சினிமா, சினிமாவைத் தாண்டி உலகத்தில் என்ன ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் என்ன செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது போன்ற விஷயங்கள் அப்டேட்டாக பதிவாகி இருக்கும். எனவே தான் காலையில் எழுந்த உடனே முதலில் ட்விட்டரை பார்ப்பேன் என்றார்.

ஆப் அடிமை இல்லை

ஆப் அடிமை இல்லை

அதற்காக நான் ஒன்றும் மொபைல் ஃபோனுக்கோ அல்லது அதில் உள்ள ஆப்களுக்கோ அடிமை கிடையாது. அன்றாடம் நடப்பவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் தான். என்னுடைய நண்பர்களுடன் பேசும்போது கூட, உலக நடப்புகளை அவர்களிடம் நான் தான் முதலில் சொல்வேன் என்று சுனைனா கூறினார்.

நான் ரொம்ப வீக்

நான் ரொம்ப வீக்

அப்படி சொல்லும்போது, அவர்கள் ஆச்சரியப்பட்டு உனக்கு எப்படி தெரிந்தது என்று கேட்கும் பொழுது, நான் இப்பொழுது தான் ட்விட்டரில் பார்த்தேன் என்று சொல்லும்போது எனக்கே ஒரு கெத்தாக தெரியும். இருந்தாலும் கூட பொது விஷயங்களில் நான் ரொம்ப வீக் தான் என்று ஒப்புக்கொண்டார் சுனைனா.

லைக்ஸ் குவிப்பது ஏன்

லைக்ஸ் குவிப்பது ஏன்

ஃபிங்கர்டிப் வெப்சீரிஸில் நடித்ததுபோல், உண்மையிலேயே நான் சில பேரை பார்த்திருக்கிறேன். எங்கேயாவது ஹோட்டலில் சாப்பிடப்போனால், அங்கே நண்பர்கள் சேர்ந்துகொண்டு, சாப்பாடு வந்தவுடன், அதை முதலில் ஃபோட்டோ எடுப்பது, அத்தோடு தங்களையும் சேர்த்து ஃபோட்டோ எடுத்து உடனுக்குடன் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என சமூக வலைதளங்களில் போட்டு விடுவது என்று நிறைய பேர்களை தினமும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்.

பொழுது போக்கு

பொழுது போக்கு

எனக்கும் அந்த பழக்கம் முதலில் இருந்தது. பின்பு அந்தப் பழக்கத்தை நான் மாற்றிக்கொண்டுவிட்டேன். ஆனால் என்னுடைய நண்பர்கள் சிலர் இதை அன்றாட பொழுதுபோக்காகவே வைத்துள்ளனர். இதை எல்லாம் லைக்ஸ் வாங்கி குவிக்கவேண்டும் என்ற கற்பனை சந்தோசத்திலேயே உள்ளனர். ஆனால் உண்மையான சந்தோசம் அது கிடையாது என்றார் சுனைனா.

நடிகர் சிவகுமார்

நடிகர் சிவகுமார்

ஃபிங்கர்டிப் வெப் சீரிஸில் சுனைனாவுடன் ஜோடி சேர்ந்துள்ளவர் நடிகர் சிவகுமார். இவர் நடிகர் திலகம் சிவாஜியின் பேரன். அதோடு பிக் பாஸ் சீசன் 1 புகழ் சுஜா வருணியின் கணவர். இந்த வெப் சீரிஸ் பற்றி பேசும்போது, உண்மையில் நானும் கூட எப்போதுமே மொபைல் ஃபோனை வைத்து நோண்டிக்கொண்டே இருப்பேன். ஆனால் என்னுடைய மனைவி எனக்கு நேர் எதிர். இருந்தாலும் அவ்வப்போது ஃபோனை ஒதுக்கி வைத்துவிட்டு மனைவியுடன் பொழுதுபோக்குவேன் என்றார்.

பொருத்தமான நபர்

பொருத்தமான நபர்

இவரைப்பற்றி குறிப்பிட்டு பேசிய சுனைனா, இந்த கேரக்டருக்கு பொருத்தமான நபரைத்தான் தேர்வு செய்துள்ளனர். வேறு யாரை போட்டிருந்தாலும், இந்த சீரிஸ் இந்த அளவுக்கு வந்திருக்காது என்றார்.

English summary
I am not a slave to a mobile phone or the Apps of it. Sunaina, who plays in the Fingertip Web series, said she wanted to know what was happening every day.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more