»   »  கணவருடன் சந்தோசமா இருக்கேன்... விவாகரத்து செய்யவில்லை: நடிகை கனிகா

கணவருடன் சந்தோசமா இருக்கேன்... விவாகரத்து செய்யவில்லை: நடிகை கனிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நான் கணவருடன் சந்தோசமாக இருக்கிறேன். விவாகரத்து செய்து விட்டதாக வந்த செய்து வெறும் வதந்திதான் என்று பைவ் ஸ்டார், வரலாறு' படத்தில் நடித்த கனிகா கூறியுள்ளார்.

நடிகை கனிகா தமிழில் சுசி கணேசன் இயக்கிய பைவ் ஸ்டார் என்ற படம் மூலம் அறிமுகமானார். தமிழில் எதிரி, வரலாறு ஆகிய படத்தில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள கனிகா திடீரென ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு 5 வயதில் அவருக்கு சாய் ரிஷி என்ற மகன் இருக்கிறார்.

I am not divorcing my hubby, says Kaniha

தற்போது கனிகா, ஷியாமை விட்டு பிரியப்போவதாகவும், அவரை விவாகரத்து செய்யவுள்ளதாகவும் தகவல்கள் இணைய தளத்தில் வெளியானது.

இந்த செய்தியை அறிந்த நடிகை கனிகா அதிர்ச்சியடைந்தார். இந்த செய்தி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''என்னைப் பற்றி வந்த செய்தி ஒரு வதந்தி. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாகத்தான் வாழ்கிறோம். நான் கணவரை விவாகரத்து செய்யப்போவதாக வந்த செய்தி பொய்யானவை.

நாங்கள் திருமணமான புதிதில் எப்படி மகிழ்ச்சியாக வாழ்ந்தோமோ அதுபோல் இன்றுவரை வாழ்ந்து வருகிறோம். ஆகையால் பொய்யான வதந்திகளை நம்பவேண்டாம் என்று விவாகரத்து செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை கனிகா.

English summary
Actress Kaniha has said that she is happily living with her husband and not divorcing him.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos