Just In
- 6 min ago
இப்போ நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.. சந்தோஷமாக வீடியோ போட்ட ரியோ.. என்ன சொல்றாருன்னு பாருங்க!
- 13 min ago
நீ எனக்கு என்ன என்பது உனக்கு மட்டும்தான் தெரியும்.. சுஷாந்த் பிறந்தநாளில் நண்பர் உருக்கம்!
- 19 min ago
பிறந்தநாள் கொண்டாடும் சந்தானம்.. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
- 33 min ago
இன்னும் 2 ஆண்டுகளில் சதமடிக்கவேண்டியவர்.. நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மறைவுக்கு கமல் அஞ்சலி
Don't Miss!
- Automobiles
ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது... உறுதி செய்த எஃப்சிஏ தலைவர்...
- News
சல்லிசல்லியான அதிமுக பிளான்.. மருத்துவமனையிலிருந்து ஸ்ட்ரெயிட்டா சென்னை.. சசிகலா மீது குவிந்த கவனம்!
- Lifestyle
ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை ஏன் தவிா்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்!
- Sports
கோலிக்கு நோ ஸ்பெஷல் கவனிப்பு.. எல்லோருக்கும் இனி ஒரே மரியாதைதான்.. பிசிசிஐ எடுக்கும் முடிவு
- Finance
முதல் நாளே அசத்தும் ஜோ பிடன்.. விசா, குடியேற்ற கட்டுப்பாடுகள் ரத்து செய்ய உத்தரவு..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நான் இனிமேல் காமெடி டைரக்டர் கிடையாது... ஒன்லி ஆக்சன் டைரக்டர் - சுந்தர்.சி
சென்னை : நான் இயக்கும் படம் என்றாலே காமெடி படம் தான் என்ற ட்ரெண்ட், இனிமேல் ஆக்சன் டைரக்டர் என்று மாறும் அளவிற்கு இதுவரை பார்த்திராத சண்டைக் காட்சிகள் ஆக்சன் படத்தில் அமைக்கப்பட்டுள்ளன என்று சுந்தர்.சி தெரிவித்தார்.
தெலுங்கில் சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக் ஆன ஆக்சன் த்ரில்லர் படமான அயோக்கியாவிற்கு பிறகு நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படம் ஆக்சன். மத கஜ ராஜா மற்றும் ஆம்பள படத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக சுந்தர்.சி-விஷால் கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் தமன்னா.

விஷால் ஒரு ராணுவ அதிகாரி கதாபாத்திரத்திலும் தமன்னா ராணுவ கமாண்டோ கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். தமன்னாவும் விஷாலுக்கு இணையாக ஆக்சன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுதந்திர தினத்தன்று பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் குஷ்பூ சுந்தர். அந்த போஸ்டர் மக்களிடையே மிகுந்த உற்சாகத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. ஆக்சன் படம் என்றாலே நடிகர் அர்ஜூனிற்கு பிறகு விஷால் தான் பொருத்தமானவர்.
தல 61 ஹாட் அப்டேட்... மீண்டும் பாலிவுட் ரீமேக்கில் நடிக்கும் அஜித்.. இயக்குநர் யார் தெரியுமா?
என்னுடைய படங்களில் பெரிதாக ஆக்சன் காட்சிகள் இருக்காது. ஆனால் இப்படமோ முழுக்க முழுக்க ஆக்சன் திரில்லர் மூவி. காமெடி டைரக்டர் என்ற என்னுடைய ட்ரெண்ட் இனிமேல் ஆக்சன் டைரக்டர் என்று மாறும் அளவிற்கு இப்படத்தில் தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத சண்டை காட்சிகள் இப்படத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்றார் சுந்தர்.சி.
படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் கபீர் துல்ஹான் சிங் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் யோகி பாபு, ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை பெரும் தொகைக்கு ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. மேலும் திரைப்படத்தின் போஸ்ட் புரடெக்சன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.