»   »  இப்படிப்பட்ட விளம்பரத்தில் நடித்தேனா... எனக்கே அருவருப்பா இருக்கு..!

இப்படிப்பட்ட விளம்பரத்தில் நடித்தேனா... எனக்கே அருவருப்பா இருக்கு..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : தமிழ் சினிமாவில் நடிகையாகத் துவங்கி, பின்னர் பாலிவுட், தற்போது ஹாலிவுட் என கலக்கி வருபவர் ப்ரியங்கா சோப்ரா. 'குவான்டிகோ', 'பேவாட்ச்' ஆகியவற்றில் நடித்ததால் ஹாலிவுட் ரசிகர்களுக்கும் ஃபேவரிட் ஆகிவிட்டார்.

இவர் ஆரம் பகாலத்தில் ஒரு விளம்பரத்தில் நடித்ததை நினைத்தால் தற்போது தனக்கே அருவருப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார். முகத்தை வெள்ளையாக்கும் எனக் கூறி விற்கப்படும் கிரீம் விளம்பரம் பற்றித் தான் இப்படித் தெரிவித்துள்ளார்.

I am so disgraceful to act in this ads

அப்போது அறியாமையால் அந்த விளம்பரங்களில் நடித்துவிட்டேன். டூத்பேஸ்ட்டுக்கு அடுத்து அதிக விற்பனையாகும் பொருள் ஃபேஸ் க்ரீம்கள்தான். நிறத்தால் பல பெண்களுக்கு தாழ்வு மனப்பான்மையைத் தோன்ற வைத்ததற்காக வெட்கப்படுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

உண்மையைப் புரிந்துகொண்ட உடனே அந்த விளம்பர ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிட்டதாகவும், இனி அப்படிப்பட்ட விளம்பரத்தில் நடிக்கவே மாட்டேன் எனவும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி என்பது நிறத்தில் இல்லை, நிறம் சார்ந்து உள்ள பாகுபாட்டைத் தான் வெறுப்பதாகவும் பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

English summary
Priyanka chopra said that she feels disgusting for acting in a fairness cream advertisement.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil