twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்தப் படத்தை பார்த்துவிட்டு வியந்து போனேன்... பா. ரஞ்சித்தை பாராட்டிய வெங்கட்பிரபு!

    |

    சென்னை : இயக்குனர் வெங்கட்பிரபு மாநாடு என்ற சூப்பர் ஹிட் வெற்றி படத்தை தொடர்ந்து இயக்கிய திரைப்படம் மன்மத லீலை

    இதுவரை தமிழில் மட்டும் படங்களை இயக்கி வந்த வெங்கட் பிரபு முதல் முறையாக தெலுங்கில் நேரடிப் படம் ஒன்றை இயக்குகிறார் அதில் நடிகர் நாக சைதன்யா ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

    இந்த நிலையில் பா ரஞ்சித்தின் படத்தை பார்த்துவிட்டு வியந்து போனதாக வெங்கட்பிரபு பேசியுள்ளார்

     பணம் சம்பாதிக்க தான் சினிமாவுக்கு வந்தேன்... இயக்குனர் நெல்சன் பேச்சு! பணம் சம்பாதிக்க தான் சினிமாவுக்கு வந்தேன்... இயக்குனர் நெல்சன் பேச்சு!

    காமெடிக்கு அதிக முக்கியத்துவம்

    காமெடிக்கு அதிக முக்கியத்துவம்

    வெங்கட் பிரபு திரைப்படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது அந்த அளவிற்கு இவரது திரைப்படங்களில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கலர்ஃபுல்லான க்ளாமர் காட்சிகள் கலகலப்பான காமெடி என இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. சென்னை 600028 மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான வெங்கட் பிரபுவுக்கு அந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா,பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

    டைம் லூப் பாணியில்

    டைம் லூப் பாணியில்

    வெங்கட் பிரபுவுக்கு கடைசியாக வெளியான திரைப்படம் மாநாடு. சிம்பு ஹீரோவாக நடித்த இப்படம் டைம் லூப் பாணியில் எடுக்கப்பட்டது. தமிழ் ரசிகர்களுக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை கொடுத்த மாநாடு திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்தது. மாநாடு வெற்றியைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்த மன்மத லீலை திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றது முழுக்க முழுக்க அடல்ட் கண்டெண்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

    தெலுங்கில் நேரடிப் படம்

    தெலுங்கில் நேரடிப் படம்

    இதுவரை தமிழில் மட்டும் படங்களை இயக்கி வந்த வெங்கட் பிரபு முதல் முறையாக தெலுங்கில் நேரடிப் படம் ஒன்றை இயக்குகிறார். அந்த படத்தில் நடிகர் நாக சைதன்யா ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சில வாரங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் தொடங்கியது.

    மெட்ராஸ்

    மெட்ராஸ்

    இவ்வாறு தமிழ் சினிமாவில் மிக பிஸியான இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் வெங்கட் பிரபுவிடம் சென்னை 600028 உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இயக்குனர் பா ரஞ்சித். அட்டகத்தி மூலம் இயக்குனராக அறிமுகமான பா ரஞ்சித் அதைத் தொடர்ந்து மெட்ராஸ் என்ற பிளாக்பஸ்டர் வெற்றி படத்தை இயக்கி ரசிகர்களை உற்றுப் பார்க்க வைத்தார்.

    Recommended Video

    PA Ranjith Speech | 'இவங்களுக்கு ஜாதியே தெரியாது! பாவம்!' | Oneindia Tamil
    பா. ரஞ்சித்தை பாராட்டிய வெங்கட்பிரபு

    பா. ரஞ்சித்தை பாராட்டிய வெங்கட்பிரபு

    சூப்பர் ஸ்டார் ரஜினியை இம்ப்ரஸ் செய்த மெட்ராஸ் படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து கபாலி மற்றும் காலா உள்ளிட்ட படங்களை இயக்கும் பா. ரஞ்சித் வாய்ப்பைப் பெற்றார்

    இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய வெங்கட்பிரபு பா. ரஞ்சித் தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் பா.ரஞ்சித்தின் மெட்ராஸ் படத்தை பார்த்துவிட்டு வியந்து போனேன். அவனுக்குள் இப்படியான ஒரு சீரியஸான முகம் உள்ளது என்பது என்னிடம் உதவி இயக்குனராக பணிபுரியும் போது எனக்கு தெரியாது. மெட்ராஸ் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என தன்னுடைய சிஷ்யன் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு வியந்து பாராட்டியுள்ளார்.

    English summary
    I am surprised after seeing Pa Ranjith Madras Movie Says Venkat Prabu
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X