»   »  அட, "பேய்"க்குப் பிள்ளையார் சுழி போட்டதே இவர்தானுங்க..!

அட, "பேய்"க்குப் பிள்ளையார் சுழி போட்டதே இவர்தானுங்க..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழில் அதிகமாக பேய் படங்கள் வருவதற்கு காரணமே தன்னுடைய ஷாக் படம் தான் என நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவிற்கு தற்போது பேய் பிடித்திருக்கிறது என்றால் மிகையில்லை. அந்தளவிற்கு பேய்ப்படங்கள் ரிலீசாகி வருகின்றன. புதிதாகவும் பல பேய்ப்படங்கள் தயாராகி வருகின்றன. சமீபகாலமாக பிரபல நடிகைகளும் பேய்ப்படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.


இந்நிலையில், தமிழ் சினிமாவில் அதிகளவில் பேய்ப்படங்கள் வர காரணமே நான் தான் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் பிரசாந்த்.


சாகசம்...

சாகசம்...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் நாயகனாக நடித்த சாகசம் படம் கடந்த வாரம் ரிலீசாகி, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.


குயின் ரீமேக்...

குயின் ரீமேக்...

பிரசாந்த் தமிழில் நடிக்க வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டன. சாகசம் படத்தைத் தொடர்ந்து இந்தி படமான குயின் மற்றும் ஸ்பெஷல் 26 ஆகிய படங்களின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் பிரசாந்த்.
ஷாக்...

ஷாக்...

தற்போது பேய் படங்களுக்கு தமிழில் அதிக வரவேற்பு உள்ளது. ஏற்கனவே கடந்த 2004ம் ஆண்டு ஷாக் என்ற பேய்ப்படத்தில் நடித்திருந்தார் பிரசாந்த்.
பேய்ப்பட சீசன்...

பேய்ப்பட சீசன்...

இப்படத்தைத் தொடர்ந்தே தமிழில் பேய்ப் பட சீசன் கொடி கட்டிப் பறக்கிறது எனக் கூறியுள்ள பிரசாந்த், தமிழில் தற்போது அதிகமான பேய் படங்கள் வரக் காரணமே தன்னுடைய ஷாக் படம் தான் என்கிறார்.


பிள்ளையார் சுழி...

பிள்ளையார் சுழி...

இதன்மூலம், தமிழில் பேய் பட சீசனிற்கு பிள்ளையார் சுழி போட்டதே நான் தான் எனக் கூறும் பிரசாந்த், மீண்டும் பேய் கதையில் நடிப்பது பற்றி முடிவு செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
English summary
Actor prasanth has said that he is the one to start horror movie trend in Tamil cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil