»   »  தணிக்கைக் குழு உறுப்பினராகிறார் கமல் ஹாஸன்

தணிக்கைக் குழு உறுப்பினராகிறார் கமல் ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

எந்த தணிக்கைக் குழுவை கடுமையாக எதிர்க்கிறாரோ, அதே குழுவின் உறுப்பினராகிறார் நடிகர் கமல் ஹாஸன்.

திரைப்பட தணிக்கைக் குழுவைத் திருத்தி அமைக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதில் கமல்ஹாசனையும் தணிக்கை குழு உறுப்பினராக்க முடிவு செய்துள்ளார்களாம்.

I&B Ministry decides to include Kamal in Censor Board

இதுபோல் பிரபல இயக்குனர்கள் ஷாஜி கருன், கவுதம் கோஷ் ஆகியோரும் தணிக்கை குழு உறுப்பினர்கள் ஆகிறார்கள். பிரபல டைரக்டர் ஷியாம் பெனகல் தலைமையிலான குழு கமல்ஹாசனை தணிக்கை குழு உறுப்பினராக்க சிபாரிசு செய்துள்ளது. இந்த தகவலை ஷியாம் பெனகல் தெரிவித்துள்ளார்.

ஷியாம் பெனகல் தலைமையிலான குழுவில் இடம் பெற்றுள்ள படத் தயாரிப்பாளர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெக்ரா, பியாஸ் பாண்டே, சினிமா பத்திரிகையாளர் பவானி சோமையா, உள்ளிட்டோர் சமீபத்தில் தகவல் ஒளிபரப்புத்துறை மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியை மும்பையில் சந்தித்தனர்.

அப்போது தணிக்கை குழுவில் யார் யாரை சேர்ப்பது, எவ்வாறு மாற்றி அமைப்பது என்பது குறித்து ஆலோகிக்கப்பட்டது. கமல் ஹாசன் தென்னிந்திய சினிமாவில் முக்கியமானவர். நடிகர், படத் தயாரிப்பாளர். எனவே அவரை திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் ஆக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

English summary
The Ministry of Information and Broadcasting has decided to include actor Kamal Hassan in to Censor board.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil