»   »  மலேசிய பாக்ஸ் ஆபீஸில் ரஜினியின் லிங்கா, விஜய்யின் கத்தியை தோற்கடித்த 'ஐ'

மலேசிய பாக்ஸ் ஆபீஸில் ரஜினியின் லிங்கா, விஜய்யின் கத்தியை தோற்கடித்த 'ஐ'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்ரம் நடிப்பில் மிரட்டிய ஐ படம் மலேசிய பாக்ஸ் ஆபீஸில் விஜய்யின் கத்தி, ரஜினிகாந்தின் லிங்கா பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் அசத்தியுள்ள படம் ஐ. ஷங்கர் படங்களுக்குரிய விஷயங்கள் ஐ படத்தில் மிஸ்ஸானாலும் விக்ரம் அதை தனது நடிப்பால் சரி செய்துள்ளார். ஏமி ஜாக்சன் தனது அழகால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

படம் ரிலீஸான முதல் வாரத்திலேயே உலக அளவில் ரூ.100 கோடி வசூல் செய்தது.

மலேசியா

மலேசியா

மலேசியாவில் ஐ படம் நல்ல வசூல் செய்து வருகிறது. அங்கு வசூலில் புதிய சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கத்தி, லிங்கா

கத்தி, லிங்கா

மலேசியாவில் ஐ 40 தியேட்டர்களில் ரிலீஸானது. ரிலீஸான 10 நாட்களில் படம் ரூ.5.35 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ஐ மலேசியாவில் ரஜினியின் லிங்கா(ரூ. 4 கோடி) மற்றும் விஜய்யின் கத்தி(ரூ. 3.90 கோடி) பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

முதல் வாரம்

முதல் வாரம்

ஐ மலேசியாவில் ரிலீஸான முதல் வாரத்தில் ரூ.3.74 கோடி வசூல் செய்தது. தற்போதும் அந்த படம் ஓடும் தியேட்டர்களில் நல்ல கூட்டம் உள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

ஐ படம் அமெரிக்காவில் ரூ.4.85 கோடியும், கனடாவில் ரூ.1.99 கோடியும், இங்கிலாந்தில் ரூ.3.35 கோடியும், ஆஸ்திரேலியாவில் ரூ.1.62 கோடியும் வசூல் செய்துள்ளது.

Read more about: vikram, , விக்ரம்
English summary
Vikram starrer I has beaten the collection of Rajini's Lingaa and Vijay's Kaththi in the Malaysian Box office.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil