»   »  ஏகப்பட்ட விரல்களை நீட்டும் சிவ கார்த்தி... கட்டுப்படியாகாது என்கிறார் பாண்டிராஜ்

ஏகப்பட்ட விரல்களை நீட்டும் சிவ கார்த்தி... கட்டுப்படியாகாது என்கிறார் பாண்டிராஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திக்கேயனை வைத்து படம் பண்ணும் அளவிற்கு பசங்க புரொடக்‌ஷன் வளர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ்.

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திக்கேயனை தனது மெரினா படம் மூலம் ஹீரோவாக்கியவர் பாண்டிராஜ்.

தற்போது தமிழில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி, முன்னணி நாயகர்களுள் ஒருவராக வளர்ந்து நிற்கிறார் சிவகார்த்திக்கேயன்.

ரஜினிமுருகன்...

ரஜினிமுருகன்...

பொங்கலுக்கு ரிலீசான ரஜினிமுருகன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. உடன் ரிலீசான மற்ற படங்களை விட அதிக வசூலையும் தந்து வருகிறது.

உயரும் சம்பளம்...

உயரும் சம்பளம்...

இவ்வாறு ஒவ்வொரு படங்கள் மூலமும் அதிகளவு ரசிகர்களைப் பெற்று வருகிறார் சிவகார்த்திக்கேயன். இதனால் அவரது வாய்ப்பும், சம்பளமும் அதிகரித்து வருகிறது.

தனுஷ்...

தனுஷ்...

இந்த சூழ்நிலையில் சமீபத்தில் சிவகார்த்திக்கேயன் குறித்துப் பேசிய தனுஷ், ‘அவருக்கு சம்பளம் கொடுத்துக் கட்டுப்படியாகவில்லை' எனத் தெரிவித்திருந்தார். காரணம் ஆரம்பகட்டத்தில் சிவகார்த்திக்கேயனின் வளர்ச்சியில் அதிகம் உதவியவர் தனுஷ் என்றால் மிகையில்லை.

எதிர்நீச்சல்...

எதிர்நீச்சல்...

சிவகார்த்திக்கேயனை வைத்து அவர் எதிர்நீச்சல் படத்தை எடுத்திருந்தார். அப்படத்தில் அவர் பாடல் ஒன்றிலும் நடித்திருந்தார்.

பாண்டிராஜ்...

பாண்டிராஜ்...

இந்நிலையில், பசங்க 2 மற்றும் கதகளி பட வெற்றியைத் தொடர்ந்து செய்தியாளர்களை நேற்று சந்தித்தார் இயக்குநர் பாண்டிராஜ். அப்போது சிவகார்த்திக்கேயனை வைத்து படம் தயாரிப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

சிவகார்த்திக்கேயன்...

சிவகார்த்திக்கேயன்...

அதற்குப் பதிலளித்த பாண்டிராஜ், "கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து படம் பண்ணவேண்டும் என்ற திட்டம் இருந்தது. ஆனால், தற்போது சிவகார்த்திகேயன் வாங்கும் சம்பளம் எகிறி விட்டது.

எட்டாத உயரத்தில் சம்பளம்...

எட்டாத உயரத்தில் சம்பளம்...

சம்பளத்தைக் கேட்டால் அவர் சில விரல்களை நீட்டுகிறார். எனவே, அவரை வைத்து படம் எடுக்கும் அளவிற்கு பசங்க புரொடக்‌ஷன் வளர வேண்டும்" என்றார்.

English summary
Director Pandiraj on behalf of Pasanga Productions met the press yesterday, 18th January to thank the media friends for the support they have rendered to his films Pasanga 2 and Kathakali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil