»   »  கமர்ஷியல் படத்துக்காக என்னால் இதைச் செய்யமுடியாது - 'காலா' நடிகை பளீச்!

கமர்ஷியல் படத்துக்காக என்னால் இதைச் செய்யமுடியாது - 'காலா' நடிகை பளீச்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் 'நியூட்டன்' படத்தில் நடித்திருப்பவர் நடிகை அஞ்சலி பாட்டீல். ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் 'காலா' படத்திலும் நடித்திருக்கிறார்.

நடிப்பு மட்டுமே என் வாழ்க்கை இல்லை எனத் தெரிவித்துள்ளார் நடிகை அஞ்சலி பாட்டீல்.

கமர்ஷியல் படங்களாக இல்லாமல் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதுதான் பிடித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நடிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை :

நடிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை :

'நடிப்பு என்பது எனது வாழ்க்கையின் ஒரு அங்கம் மட்டுமே. பயணம் செய்வது, புத்தகங்கள் வாசிப்பது, சமையல் செய்வது, புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வது எனப் பலவகையான செயல்களில் ஈடுபடவே எனக்கு விருப்பம்.

சினிமா பிடிக்கும் :

சினிமா பிடிக்கும் :

மற்ற வேலைகளைப் போல நடிப்பதும் ஒரு வேலைதான். சினிமாவில் எனக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது. அது எனது செலவுகளைச் சமாளிக்க உதவுவதால் அது பிடித்திருக்கிறது.

கமர்ஷியல் படங்களில் நடிக்கமாட்டேன் :

கமர்ஷியல் படங்களில் நடிக்கமாட்டேன் :

கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் நல்ல சம்பளம் கிடைக்கும்தான். அதற்காக நான் ஒரு விற்பனைப் பொருளாக மாறவேண்டும். பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் நடிப்பதற்காக பகட்டான ஆடைகளை அணியவேண்டும். என்னால் அவற்றையெல்லாம் செய்யமுடியாது.

நல்ல கதைதான் தேவை :

நல்ல கதைதான் தேவை :

எனக்குத் தேவையானதெல்லாம் நல்ல கதை, திறமையான இயக்குநர், நல்ல மனிதர்கள், ரசிகர்கள் தான். அதனால் தான் நல்ல கதைகள் கொண்ட படத்தில் மட்டுமே நடிக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார் அஞ்சலி பாட்டீல்.

English summary
Actress Anjali Patil has acted in Rajinikanth's film 'kaala' directed by Pa.Ranjith. Anjali Patil said that acting alone is not my life.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil