»   »  ஷாருக்கானை சப்புன்னு அறைஞ்சிருப்பேன்: நடிகை பரபரப்பு பேட்டி

ஷாருக்கானை சப்புன்னு அறைஞ்சிருப்பேன்: நடிகை பரபரப்பு பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஷாருக்கான் மட்டும் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தால் சப்பென்று அறைந்திருப்பேன் என்று பாலிவுட் நடிகை ஜெயா பச்சன் தெரிவித்திருந்தார்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியும், நடிகையுமான ஜெயபா பச்சன் மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லிவிடுவார். இதனாலேயே அவரது பேட்டிகளில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

முன்பு ஒரு முறை பிரபல பத்திரிகைக்கு பேட்டி அளித்த ஜெயா ஷாருக்கான் பற்றி பேசினார்.

சண்டை

சண்டை

நடிகை கத்ரீனா கைஃபின் பிறந்தநாள் பார்ட்டியில் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது ஷாருக்கான் சல்மானின் முன்னாள் காதலிகள் அதிலும் குறிப்பாக ஐஸ்வர்யா ராய் பற்றி கேவலமாக பேசி ஜோக்கடித்தார்.

கோபம்

கோபம்

பார்ட்டியில் ஷாருக்கான் ஐஸ்வர்யா ராயை பற்றி கூறியது ஜெயா பச்சன் காதுகளை எட்டியபோது அவர் கோபம் அடைந்தார். இது குறித்து ஷாருக்கானுடன் பேச ஜெயாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அறை

அறை

ஷாருக்கான் மட்டும் எங்கள் வீட்டில் இது மாதிரி பேசியிருந்தால் அவரை ஓங்கி அறைந்திருப்பேன். நான் அவரை என் மகன் போன்று நேசிக்கிறேன் என்று ஜெயா தெரிவித்தார்.

ரேகா

ரேகா

அமிதாப் பச்சனுக்கும், நடிகை ரேகாவுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. அப்படி இருந்திருந்தால் அவர் இந்நேரம் வேறு இடத்தில் அல்லவா இருந்திருப்பார் என்றார் ஜெயா பச்சன்.

English summary
Bollywood actress Jaya Bachchan is known for speaking her mind but at times she really leaves everyone shocked with her bold statements.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X