»   »  அஜீத் பற்றி தவறாகப் பேசினேனா?... கருணாஸ் விளக்கம்

அஜீத் பற்றி தவறாகப் பேசினேனா?... கருணாஸ் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நகைச்சுவை நடிகரும், நடிகர் சங்கத்தின் துணைத் தலைவருமான கருணாஸ் நடிகர் அஜித்தைப் பற்றி தவறாக பேசியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதனால் தற்போது திரையுலகில் லேசான சலசலப்பு எழுந்திருக்கிறது மேலும் அஜீத் ரசிகர்கள் நடிகர் கருணாஸிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

I did not say Anything Wrong about Ajith - says Karunas

அஜித்தைப் பற்றி கருணாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறான ட்விட்டினை பதிவிட்டதாகவும் இதனால் அஜீத் ரசிகர்கள் கருணாஸிற்கு எதிராகக் கண்டனங்களைப் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதனை கருணாஸ் மறுத்திருக்கிறார் அவர் கூறும்போது "என்னுடைய டுவிட்டர் கணக்கில் நடிகர் அஜித்தை பற்றி நான் அவதூறாக செய்திகளை கூறியதாக இன்று செய்தி வெளிவந்திருக்கிறது.

இது முற்றிலும் தவறான செய்தியாகும். யாரோ விஷமிகள் என்னுடைய டுவிட்டர் கணக்கில் இப்படி ஒரு தவறான முறையற்ற செய்தியை வெளியிட்டுள்ளனர்.

ஆரம்ப காலகட்டம் முதல் இன்று வரை நான் அனைத்து நடிகர் நடிகைகளுடன் நட்பாக பழகி வந்துகொண்டிருக்கிறேன். யார் மீதும் எனக்கு தனிப்பட்ட முறையில் விரோதமோ காழ்ப்புணர்ச்சியோ கிடையாது.

இந்நிலையில் இப்படி ஒரு செய்தி வந்ததை அறியும் போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இது பற்றி நாளை கமிஷனரிடம் முறையாக புகார் அளிக்கவுள்ளேன்.

என்று தனது அறிக்கையில் நடிகர் கருணாஸ் தெரிவித்திருக்கிறார். சில வாரங்களுக்கு முன்னர் இதே போன்று நடிகர் உதயநிதி விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Karunas Refuse the news that he has insulted Ajith through twitter. He says "I did not say Anything Wrong about Ajith, will File a police complaint soon".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil