»   »  என் 3 பிள்ளைகளுக்காக நான் தற்கொலை செய்யவில்லை: நடிகை நந்தினி

என் 3 பிள்ளைகளுக்காக நான் தற்கொலை செய்யவில்லை: நடிகை நந்தினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என் பெற்றோர், தம்பியை தவிக்க விட்டு செல்ல விரும்பவில்லை. அவர்கள் மூவரும் என் பிள்ளைகள் போன்று. அந்த பிள்ளைகளை கவனித்துக் கொள்ளும் கடமை எனக்கு உள்ளது. அதனால் தற்கொலை செய்யவில்லை என நடிகை நந்தினி தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நந்தினியின் காதல் கணவர் கார்த்திக் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தன் தற்கொலைக்கு நந்தினியின் அப்பா தான் காரணம் என்று கார்த்திக் கடிதம் எழுதி வைத்திருந்தார். இந்நிலையில் இது குறித்து நந்தினி பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

தற்கொலை

தற்கொலை

என் கணவர் கார்த்திக் தற்கொலை செய்து கொண்ட உடனேயே நானும் தற்கொலை செய்திருக்க வேண்டும். ஆனால் என்னை நம்பி என் பெற்றோர், தம்பி உள்ளார்கள்.

கடமை

கடமை

என் பெற்றோர், தம்பியை தவிக்க விட்டு செல்ல விரும்பவில்லை. அவர்கள் மூவரும் என் பிள்ளைகள் போன்று. அந்த பிள்ளைகளை கவனித்துக் கொள்ளும் கடமை எனக்கு உள்ளது. அதனால் தற்கொலை செய்யவில்லை.

 மன உளைச்சல்

மன உளைச்சல்

என் கணவரின் குடும்பத்தார் என் மீது ஏதேதோ புகார் தெரிவிக்கிறார்கள். இதனால் மனஉளைச்சலில் உள்ளேன். வலியுடன் போராடிக் கொண்டிருக்கிறேன்.

ப்ளீஸ்

ப்ளீஸ்

தயவு செய்து என்னை நிம்மதியாக வாழவிடுங்கள். நான் எந்த தவறான முடிவையும் எடுக்க விரும்பவில்லை என்றார் நந்தினி. நந்தினிக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டதால் அவர் கைதாகக்கூடும் என கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Nandhini said that she didn't commit suicide as she has the responsibility to take care of her three kids. She considers her parents and brother as kids.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil