twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் எந்த தவறும் செய்யவில்லை.. யாரையும் ஏமாற்றவும் இல்லை.. விசாரணையில் புலம்பிய நடிகர் ஆர்யா!

    |

    சென்னை: சைபர் க்ரைம் போலீசார் நடத்திய விசாரணையில் நடிகர் ஆர்யா தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் யாரையும் ஏமாற்றவில்லை என்றும் புலம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Recommended Video

    ஏமாற்றிவிட்டதாக ஜெர்மனி பெண் புகார்.. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் ஆர்யா ஆஜர்!

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

    தாறுமாறாய் தாராளம் காட்டும் வெப் சீரிஸ் நடிகை.. 3 மில்லியனாக எகிறிய ஃபாலோயர்ஸ்!தாறுமாறாய் தாராளம் காட்டும் வெப் சீரிஸ் நடிகை.. 3 மில்லியனாக எகிறிய ஃபாலோயர்ஸ்!

    தொடர்ந்து உள்ளம் கேட்குமே, பட்டியல், வட்டாரம், ஓரம் போ, நான் கடவுள், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்குபுக்கு, அவன் இவன், ராஜா ராணி, ஆரம்பம், இரண்டாம் உலகம், வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, கஜினிகாந்த், காப்பான், டெடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

    இதயநோயினால் அவதிப்படும் ஜெசிக்காவை காப்பாற்ற உதவுங்கள் ப்ளீஸ்

    ஆர்யாவின் கடின உழைப்பு அர்ப்பணிப்பு

    ஆர்யாவின் கடின உழைப்பு அர்ப்பணிப்பு

    கடைசியாக அவரது நடிப்பில் சார்பட்டா பரம்பரை படம் வெளியானது. ஓடிடி யில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்திற்காக நடிகர் ஆர்யா உடல் ரீதியாக வருத்திக் கொண்டதையும் அவருடைய கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பார்த்த பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    ஆர்யாவுக்கு பெண் தேடும் படலம்

    ஆர்யாவுக்கு பெண் தேடும் படலம்


    நடிகர் ஆர்யா தனக்கு பெண் தேடும் படலமாக கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பங்கேற்றார். 16 பெண்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தனக்கான பெண்ணை ஆர்யா தேர்வு செய்வார் என கூறி நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. இறுதியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

    சாயிஷாவுடன் காதல் திருமணம்

    சாயிஷாவுடன் காதல் திருமணம்

    கடைசியாக நடிகர் ஆர்யா கடந்த 2019ஆம் ஆண்டு தன்னுடன் கஜினி காந்த் படத்தில் ஜோடியாக நடித்த நடிகை சாயிஷாவை திருமணம் செய்துக் கொண்டார். தொடர்ந்து இருவரும் படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    ஆர்யா மீது ஜெர்மனி பெண் புகார்

    ஆர்யா மீது ஜெர்மனி பெண் புகார்

    இந்நிலையில் நடிகர் ஆர்யா மீது ஜெர்மனி பெண் ஒருவர் அளித்த மோசடி புகாரும் சூடுபிடித்துள்ளது. அதாவது
    ஜெர்மனியில் பணியாற்றி வருபவர் விட்ஜா. இலங்கையை சேர்ந்த விட்ஜா ஜெர்மனி சுகாதாரத்துறையில் பணியாற்றி வருகிறார். நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 70 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டதாக கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவருக்கு இ மெயில் மூலம் புகார் அளித்தார் விட்ஜா.

    படம் இல்லாததால் பணம் இல்லை

    படம் இல்லாததால் பணம் இல்லை

    அந்த புகாரில் அவர் தெரிவத்ததாவது, நடிகர் ஆர்யா, லாக்டவுன் நேரத்தில் தன்னிடம் தற்போது படம் இல்லை என்றும் பணத்திற்காக கஷ்டப்படுவதாகவும் கூறினார். மேலும் தன்னை விரும்புவதாகவும் திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்படுவதாகவும் கூறினார். அதோடு திருமணம் செய்து கொள்வதாக கூறி 70 லட்சத்து 40,000 ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டார் என்றும், பணத்தை பெற்றுக்கொண்டு தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் தெரிவித்தார்.

    சாயிஷாவை விவாகரத்து செய்து விடுகிறேன்

    சாயிஷாவை விவாகரத்து செய்து விடுகிறேன்

    பணத்தை திரும்ப கேட்ட போது, தன்னுடைய வீட்டுக்கடன் அனைத்தையும் செலுத்தி விடுவதாக மணப்பெண்ணும் நடிகையுமான சாயிஷா பெற்றோர் உறுதியளித்ததால் மட்டுமே திருமணத்துக்கு சம்மதித்ததாக ஆர்யா கூறியதாவும் புகாரில் தெரிவித்தார் விட்ஜா. மேலும் 6 மாதத்தில் சாயிஷாவை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாக நடிகர் ஆர்யா பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாகவும் மனுவில் தெரிவித்தார்.

    ஆபாசமாக பேசிய அம்மாவும் பிள்ளையும்

    ஆபாசமாக பேசிய அம்மாவும் பிள்ளையும்

    ஆர்யா தன்னை ஏமாற்றியதை அறிந்த தான் பணத்தை திரும்ப கேட்ட போது, அவரும் அவரது தாயாரும் சேர்ந்து தன்னை ஆபாசமாக பேசியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார் விட்ஜா. மேலும் ஆர்யாவுக்கு பணம் அனுப்பிய ஆதாரங்களையும், அவரது தாயார் தன்னை திட்டிய ஆதாரங்களையும் புகாருடன் விட்ஜா இணைத்திருந்தார்.

    விட்ஜா சார்பில் ஹைகோர்ட்டில் வழக்கு

    விட்ஜா சார்பில் ஹைகோர்ட்டில் வழக்கு

    இந்த புகார் மனு உரிய விசாரணைக்காக தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது தொடர்பான வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அதாவது கடந்த மார்ச் மாதம் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய சிபிசிஐடி'க்கு உத்தரவிடக்கோரி விட்ஜா சார்பில் அவரது பொது அதிகாரம் பெற்ற ராஜபாண்டியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    சிபிசிஐடிக்கு ஹைகோர்ட் உத்தரவு

    சிபிசிஐடிக்கு ஹைகோர்ட் உத்தரவு

    கடந்த மாதம் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் தற்போதைய நிலை குறித்து பதில் அளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என சிபிசிஐடி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விடுத்த கோரிக்கையை ஏற்ற சென்னை ஹைகோர்ட் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

    சைபர் க்ரைம் போலீசார் விசாரணை

    சைபர் க்ரைம் போலீசார் விசாரணை

    இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக நடிகர் ஆர்யாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு சைபர் க்ரைம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதனை ஏற்றுக்கொண்ட நடிகர் ஆர்யா, நேற்று முன்தினம் இரவு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார்.

    விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஆர்யா

    விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஆர்யா

    அங்கு சைபர் கிரைம் போலீசார் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார் நடிகர் ஆர்யா. அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சைபர் க்ரைம் போலீசார் முன்பு ஆர்யா புலம்பிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ‛‛நான் எந்த தவறும் செய்யவில்லை. யாரையும் ஏமாற்றவும் இல்லை. தயவு செய்து என்னை நம்புங்கள். என் மீது வீண்பழி சுமத்தப்படுகிறது. என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்க முயற்சி இது என புலம்பியுள்ளார்.

    என் மீதான புகாரில் உண்மை இல்லை

    என் மீதான புகாரில் உண்மை இல்லை


    மேலும் உங்கள் விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு தருகிறேன். மற்றபடி என் மீதான புகாரில் எந்த உண்மையும் இல்லை என தனது தரப்பு வாதத்தை கூறியுள்ளார் ஆர்யா. இருப்பினும் ஜெர்மனி பெண் சமர்பித்துள்ள ஆவணங்கள் தொடர்பாக அவர் எந்த கருத்தும் கூறவில்லை என தெரிகிறது.

    வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை

    வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை

    இன்டர்நெட் வழியாக தான் அவர்களின் நட்பு மற்றும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படும் நிலையில், சைபர் க்ரைம் போலீசார் உதவியோடு அவற்றை ஆராயவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    English summary
    German woman filed case against Arya that Arya cheated her out of Rs 70 lakh by claiming to be married to him. Arya appeared in front of CBCID police and said that he didnt do anything wrong and didnt cheat anyone. Arya also said that he would co-operate fully with the investigation.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X