»   »  நான் ஒன்னும் நடிகை சாட்னாவை கட்டாயப்படுத்தி திருமணம் செய்யவில்லை: கார்த்தி

நான் ஒன்னும் நடிகை சாட்னாவை கட்டாயப்படுத்தி திருமணம் செய்யவில்லை: கார்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் ஒன்றும் நடிகை சாட்னாவை மூளைசலவை செய்து கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொள்ளவில்லை என பட வினியோகஸ்தர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

பிச்சைக்காரன் படம் மூலம் நடிகையான சாட்னா டைட்டஸ் அந்த படத்தின் வினியோகஸ்தரான கார்த்தியை காதலித்து ரகசியமாக பதிவுத் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து புதுப்பட வாய்ப்புகளை ஏற்க மறுக்கிறார்.

ஏற்கனவே நடிக்க ஒப்புக் கொண்ட படங்களுக்கான அட்வான்ஸையும் திருப்பிக் கொடுத்துவிட்டார் சாட்னா.

சாட்னாவின் தாய்

சாட்னாவின் தாய்

கார்த்தி தனது மகளுக்கு ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவிட்டதாகவும், அவர்களுக்கு திருமணம் நடக்கவில்லை என்றும் சாட்னாவின் தாய் அடுக்கடுக்காக புகார் தெரிவித்துள்ளார்.

கார்த்தி

கார்த்தி

சாட்னாவின் தாயின் புகார் குறித்து கார்த்தி கூறுகையில், நானும் சாட்னாவும் காதலித்து வந்தோம். இந்நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தபோது எங்களின் பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்றார்.

பதிவுத் திருணம்

பதிவுத் திருணம்

இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் யாருக்கும் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். அடுத்த ஆண்டின் துவக்கத்தில் ஊர் அறிய முறைப்படி திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார் கார்த்தி.

கட்டாயப்படுத்தவில்லை

கட்டாயப்படுத்தவில்லை

நானும், சாட்னாவும் முழு சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். என்னை மணக்குமாறு அவரை நான் கட்டாயப்படுத்தவில்லை. எங்களின் பெற்றோரை சமாதானம் செய்து அவர்கள் ஆசியுடன் சம்பிரதாயப்படி திருமணம் செய்வோம் என நம்புகிறோம் என்று கார்த்தி கூறினார்.

    English summary
    Film distributor Karthi said that he didn't force actress Satna Titus to marry him.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil