For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மணியம் பிள்ளை நல்லவருங்க.. நான் யாருக்கும் லவ் லெட்டர் கொடுக்கலை.. மனம் திறக்கும் ஷகிலா

  By R VINOTH
  |

  சென்னை: நான் யாருக்கும் எந்த லவ் லெட்டரும் கொடுக்கவே இல்லை அப்படின்னு கவர்ச்சி நடிகை ஷகிலா சொல்லி இருக்காங்க. மணியம் பிள்ளை ஒரு நல்ல டைரக்டர், அதோட நல்ல மனுஷன். நாங்க எப்பவுமே ஃபிரண்டா தான் பழகிட்டு வர்றோம்னு மனம் திறந்து சொல்றாங்க ஷகீலா.

  கவுண்டமணி, செந்தில் கூட நம்ம ஷகிலா, ஆரம்ப காலத்துல ஒரு படத்துல ஜோடியா நடிச்சிருப்பாங்க. அந்தப் படத்துல வர்ற காமெடி இப்ப கூட நித்தமும் டிவில போட்டா சிரிப்ப அடக்கவே முடியாது.

  அந்தப்படத்துல ஷகிலா, கவுண்டமணி கிட்ட மாமா, நா இப்போ வயசுக்கு வந்துட்டேன்னு சொல்ல, அதுக்கு கவுண்டமணி, இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன, எல்லாமே முடிஞ்சி போச்சு அப்டின்னு சொல்ல, நமக்கு சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாகிடும். அப்படி ஒரு காலத்துல காமெடி நடிகையா இருந்து குடும்ப கஷ்டத்துனாலே மலையாளக் கரையோரமா ஒதுங்கி, அங்க கவர்ச்சி நடிகையா தன்னெ மாத்திக்கிட்டு வலம் வர ஆரம்பிச்சாங்க.

  ஓடிய ஓட்டம் என்ன

  ஓடிய ஓட்டம் என்ன


  அப்ப மலையாள சூப்பர் ஸ்டார்களா இருந்த, இருக்குற மோகன்லால், மம்முட்டி என இவங்க நடிச்ச படங்கள்ளாம் தியேட்டர விட்டு ஓடிடிச்சி. ஆனா நம்ம ஷகிலா நடிச்ச படங்கள்லாம் 50 நாள் 100 நாள்னு ஓடி தயாரிப்பாளருக்கு பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுச்சி. கடந்த 1990ஆம் ஆண்டுகள்ல நம்ம ஷகிலா நடிச்ச படங்கள் எல்லாமே அமுத சுரபியா பணத்தை கொட்ட ஆரம்பிச்சிடிச்சி.

  ஷகிலா ரசிகர்கள்

  ஷகிலா ரசிகர்கள்

  இவங்க படம் ஓடுன சென்னை பரங்கிமலை ஜோதி தியேட்டர் வாசல்ல கூட்டத்தை கண்ட்ரோல் பண்ண ட்ராஃபிக் போலீஸே வந்ததுன்னா, அப்ப நம்ம ஷகிலாவோட மகிமைய பாத்துக்கோங்க. அப்ப யாராச்சும் பரங்கிமலை எங்கருக்குன்னு அட்ரஸ் கேட்டாக்கூட, தெரியாதுன்னு சொல்லுவாங்க. ஆனா, ஜோதி தியேட்டர் எங்கருக்குன்னு கேட்டா விலாவாரியா படம் போட்டு டீடெய்லா சொல்லுவாங்கன்னா பாத்துக்கோங்க சார்.

  ஷகிலா ரெஸ்ட்

  ஷகிலா ரெஸ்ட்

  அதனால என்னாச்சுன்னா, மலையாள ஹீரோக்கள்லாம் ஒண்ணா சேந்துகிட்டு, இனிமா இந்தம்மா படத்துல நடிக்கவே கூடாது. இவங்க படத்த பாத்து இளைய சமுதாயம் ரொம்ப கெட்டுப்போயிடுச்சுன்னு அபாண்டமா பொய் சொல்லி படத்துல நடிக்கவிடாம பண்ணிட்டாங்க. வேற வழியில்லாம ஷகிலாவும் கொஞ்ச காலமா படத்துல நடிக்காம இருந்தாங்க. அப்புறம், கொஞ்ச காலம் கழிச்சு திரும்பவும் நடிக்க வந்தாங்க. ஆனாலும் முந்தி மாதிரி ஜாஸ்தி படத்துல நடிக்க முடியல.

  ஷகிலாவின் காதல்

  ஷகிலாவின் காதல்

  இப்ப சமீப காலமா நம்ம ஷகிலாவ பத்தி சினி ஃபீல்டுல பேசிக்கிற விஷயம் என்னன்னா, மலையாளத்துல 'சோட்டா மும்பை' அப்டின்னு ஒரு படம் வந்தது. அந்தப் படத்தோட டைரக்டர்க்கு நம்ம ஷகிலா லவ் லெட்டர் கொடுத்ததாகவும், அதுக்கு அவரு எந்த பதிலுமே சொல்லாம போய்ட்டாருன்னும் ஒரு செய்தி றெக்க கட்டி பறக்குது.

  உதவி செய்த மனிதர்

  உதவி செய்த மனிதர்

  இதுக்கு ஷகிலா கிட்ட கேட்டப்போ, ‘சோட்டா மும்பை' படத்துல நா நடிச்சது உண்மை தான். ஆனா நீங்க நெனைக்குற மாதிரி நா லவ் லெட்டர் எதுவும் கொடுக்கல. ஆனா அவருதான் உண்மையிலேயே எங்களுக்கு பணமெல்லாம் கொடுத்து உதவி செஞ்சார் அப்டின்னு சொன்னாங்க.

  அந்த சமயத்துல எங்க அம்மா ரொம்ப ஒடம்புக்கு முடியாம இருந்தாங்க. அவரு எங்க ஃபேமிலிக்கு நல்லது தான் செஞ்சாரு. ஆனா, இதெப் போய் எல்லாரும் ரொம்ப தப்பா பேச ஆரம்பிச்சுட்டாங்க.

  ஃபீல் பண்ணும் ஷகிலா

  ஃபீல் பண்ணும் ஷகிலா


  அது மட்டுமில்ல, நா அந்த சமயத்துல வேற ஒருத்தர ரொம்ப சின்சியரா லவ் பண்ணிட்டு இருந்தேன் அப்டின்னு ஷகிலா ரொம்ப ஃபீல் பண்ணி சொன்னாங்க. நம்ம ஷகிலா எத்தனையோ வித்தியாசமான படங்கள்ல நடிச்சி இருந்தாலும், கவர்ச்சி நடிகைங்கிற முத்திரை தான் ரொம்ப அழுத்தமா பேசப்படுது. அனுராதா, சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி என நாம எத்தனையோ கவர்ச்சி நடிகைங்க வாழ்க்கையில எத்தனையோ சிக்கல்களை நாம பாத்திருக்கோம். நம்ம ஷகிலாவோட வாழ்க்கைல எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லாம நிம்மதியா சந்தோஷமா இருக்கட்டும்னு மீடியால இருக்குற பெரிய மனுஷங்கள்லாம் வேண்டிக்கறாங்க.

  English summary
  Maniam Pillai is a good director, and with me, good man. We are always friends. I never gave him any love letter, said shakeela.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X