twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முருங்கைக்காய் காமெடிக்கு சின்னவயசுல அர்த்தம் புரியல...ஆனா இப்போ!

    |

    சென்னை : இளமை துள்ளலுடன் கவர்ச்சி காமெடி என திரைப்படங்களில் கலக்கிக்கொண்டு உள்ளவர் இயக்குனர் வெங்கட் பிரபு

    டைம் லூப் பாணியில் வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் செம ஹிட் அடித்து வசூலை வாரி குவித்தது

    அடுத்ததாக அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியிருக்கும் மன்மதலீலை என்ற படத்தை இயக்கியுள்ள வெங்கட்பிரபு முருங்கைக்காய் காமெடி குறித்து பேசியுள்ளார்

    “மன்மத லீலை“ அடல்ட் படம் தான்… ஆனால் விரசம் இருக்காது… வெங்கட்பிரபு பேச்சு!“மன்மத லீலை“ அடல்ட் படம் தான்… ஆனால் விரசம் இருக்காது… வெங்கட்பிரபு பேச்சு!

     தொடர் வெற்றி

    தொடர் வெற்றி

    இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்திலும் இளமை துள்ளலுடன் கவர்ச்சி காமெடி என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். படம் ஆரம்பித்தது முதல் இறுதிவரை அனைவரும் வாய்விட்டு சிரிப்பது நிச்சயம் அந்த அளவிற்கு இவரது திரைப்படங்களில் ஹியூமர் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான வெங்கட்பிரபு அதன்பிறகு சரோஜா, கோவா, மங்காத்தா ,மாஸ் என்கிற மாசிலாமணி என தொடர் வெற்றி படங்களை கொடுத்தார்.

     எஸ் ஜே சூர்யா வில்லன்

    எஸ் ஜே சூர்யா வில்லன்

    இந்நிலையில் சிம்புவுடன் முதல் முறையாக இந்த மாநாடு திரைப்படம் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே பல்வேறு பிரச்சனைகளால் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறாமல் இருந்தது. தயாரிப்பாளருக்கும் சிம்புவுக்கும் இடையே கோர்ட் வரையிலும் சண்டை சென்றது. ஒரு வழியாக அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக முடிந்து படமும் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு வெளியானது. டைம் லூப் பாணியில் வெளியான இந்தப்படம் வெங்கட் பிரபுவின் முந்தைய படங்களை விட முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவானது மேலும் இதில் எஸ் ஜே சூர்யா வில்லன் வேடத்தில் அட்டகாசமாக நடித்திருப்பார். எஸ் ஜே சூர்யாவின் கதாபாத்திரம் இந்த படத்தில் அனைவராலும் பாராட்டப்பட்டது.

     மன்மதலீலை

    மன்மதலீலை

    மாநாடு படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு முன்னணி நடிகரை வைத்து இயக்குவார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க இப்பொழுது மன்மதலீலை என்ற அடல்ட் காமெடி திரைப்படம் ஒன்றை இயக்கி உள்ளார். அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் இளைஞர்களை கவரும் வகையில் உருவாகியுள்ளது.

    Recommended Video

    Manmatha leelai | Premji | Orkut காதலையும் பேசிருக்கோம் | Filmibeat Tamil
     முருங்கைக்காய் காமெடி புரியவில்லை

    முருங்கைக்காய் காமெடி புரியவில்லை

    வரும் ஏப்ரல் 1ஆம் தேதி மன்மதலீலை வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் விழாவில் பேசிய வெங்கட்பிரபு சிறுவயதில் அனைவரும் பாக்யராஜ் படத்தை திரையரங்கில் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பெரியவர்கள் மட்டும் முருங்கைக்காய் காமெடி வரும்போது சிரிப்பார்கள் அப்போது சின்ன பசங்களாக இருந்த எங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை எதற்காக சிரிக்கிறார்கள் என்பதே புரியவில்லை ஆனால் வளர்ந்த பிறகு தான் தெரிகிறது அந்த காமெடி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று என முருங்கைக்காய் காமெடி குறித்து வெங்கட்பிரபு மன்மத லீலை பட விழாவில் பேசியுள்ளார்.

    English summary
    I didn’t understand the meaning of drumstick comedy at earlier age says venkat prabu
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X