twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோவா நடிக்க சத்தியமா விரும்பியதில்லை... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

    |

    சென்னை: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த்

    அண்ணாத்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

    இந்த நிலையில் ஹீரோவாக நடிக்க ஒரு நாளும் விரும்பியதில்லை என ரஜினிகாந்த் வெளிப்படையாக பேசியுள்ளார்.

    இன்னொரு வைல்டு கார்டா? சுரேஷ் தாத்தாவுக்கு பதில் இப்போ யாரு வந்திருக்கா தெரியுமா?இன்னொரு வைல்டு கார்டா? சுரேஷ் தாத்தாவுக்கு பதில் இப்போ யாரு வந்திருக்கா தெரியுமா?

    வில்லனாக

    வில்லனாக

    சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் மிகச் சிறந்த நடிகராக சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறந்து கொண்டுள்ளவர் நடிகர் ரஜினிகாந்த் இயல்பான ஸ்டைலின் மூலம் பார்க்கும் அனைவரையும் கவரும் ரஜினிகாந்த் இந்திய அளவில் அனைவரும் விரும்பும் மிகச் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து உள்ள ரஜினிகாந்த் வாழ்க்கையில் கண்டக்டராக இருந்து பின் திரைப்படங்களில் வில்லனாக நடித்து இப்போது அடுத்தது ஹீரோவாக ஆனவர்.

    கதாநாயகனாக அறிமுகம்

    கதாநாயகனாக அறிமுகம்

    16 வயதினிலே உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்து வந்த ரஜினிகாந்த் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் பைரவி. எம்.பாஸ்கர் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை வள்ளி வேலம் மூவிஸ் தயாரிப்பாளர் கலைஞானம் தயாரித்திருந்தார். இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க ரஜினிகாந்த் முதலில் ஒத்துக் கொள்ளவே இல்லை அதை அவரே பகிர்ந்துள்ளார்.

    வேண்டாமுன்னு சொல்லிட்டேன்

    வேண்டாமுன்னு சொல்லிட்டேன்

    கலைஞானம் சார் ஒரு நாள் என்னை பார்க்க வந்திருந்தார். அப்பொழுது நான் முதல் முறையாக படம் ஒன்றை இயக்க உள்ளேன் என என்னிடம் கூறினார் . அப்படியா சார் சூப்பர் சார்.. ஹீரோ யார் சார் என நான் கேட்டேன் அதற்கு நீதான் ஹீரோ என கலைஞானம் சார் சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சத்தியமாக சொல்கிறேன் எனக்கு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசையே இருந்தது கிடையாது. நான் கண்டக்டராக இருந்தேன், ஒரு ப்ளாட்டு, ஒரு ஸ்கூட்டர், வில்லன்னு ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருந்தேன். அதுவே எனக்கு பெரிய விஷயம். மேலும் எனக்கு டான்ஸ் வேற வராது அதனால் வேண்டாமுன்னு சொல்லிட்டேன்.

    சூப்பர் ஸ்டார் பட்டம்

    சூப்பர் ஸ்டார் பட்டம்

    நடராஜ் என்னிடம் வந்து சிவாஜி இந்த கதையைக் கேட்டார் நல்லா இருக்கு பண்ணு என சொன்னார்.. நானும் கதையை கேட்டேன்.. அருமையாக இருந்தது ஆனால் சம்பளம் 35 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் கேட்டேன். அடுத்த நாளே கலைஞானம் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு சென்றார். அப்போது எனக்கு சத்தியமாக தெரியாது அது தாலி வித்த காசு என்று. அந்த படத்தில் எனக்கு கிரேட் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்தார்கள்.

    மறுத்து விட்டார்கள்

    மறுத்து விட்டார்கள்

    நான் அதெல்லாம் வேண்டாம் என்று கூறக் கிரேட்டை மட்டும் எடுத்து விட்டார்கள்.

    சூப்பர் ஸ்டார் அப்படியே இருக்கட்டும் என மறுத்து விட்டார்கள். படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அதன்பிறகு கலைஞானம் இடம் மீண்டும் படம் பண்ணலாம் என நானும் கேட்கவில்லை அவரும் கேட்கவில்லை. இந்த விஷயத்தில் சிறு தவறு செய்து விட்டேன். இல்லையென்றால் ஒரு 10 படமாவது இருவரும் இணைந்து செய்திருக்கலாம் . அதுதான் நேரம் அவர் தன்மானம் மிக்கவர் கோபம் அதிகம் நான் ஏன் ரஜினியை கேட்கணும். குழந்தை அழுதால் தானே அம்மா பால் கொடுப்பாள். இவ்வாறு ரஜினி பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

    English summary
    I didn’t want to become a hero says super star rajinikanth
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X