»   »  அதை எல்லாம் புருஷன் கிட்ட சொல்ல மாட்டேன்: சமந்தா

அதை எல்லாம் புருஷன் கிட்ட சொல்ல மாட்டேன்: சமந்தா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அந்த விஷயத்தை எல்லாம் கணவரிடம் சொல்ல மாட்டேன் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

திருமணம் நடந்துவிட்டால் நடிகைகளின் மார்க்கெட் போய்விடும் என்ற எண்ணத்தை மாற்றியுள்ளார் சமந்தா. திருமணத்திற்கு பிறகும் தெலுங்கு, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

இயக்குனர்களும் அவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்க ஆர்வமாக உள்ளனர்.

ரங்கஸ்தலம்

ரங்கஸ்தலம்

சமந்தா ராம் சரண் தேஜாவுடன் சேர்ந்து நடித்த ரங்கஸ்தலம் தெலுங்கு படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. சமந்தா நடிப்பில் 8வது படம் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. இதனால் சமந்தா பெரு மகிழ்ச்சியில் உள்ளார்.

வெற்றி

வெற்றி

தோல்விகளை எப்படி கையாள்வது என்பதை கணவரிடம் இருந்து கற்றுக் கொண்டுள்ளேன். முன்பு எல்லாம் என் படம் ஓடாவிட்டால் கவலையாக இருப்பேன். ஆனால் தற்போது அப்படி இல்லை என்கிறார் சமந்தா.

உழைப்பு

உழைப்பு

ஒவ்வொரு படத்திலும் 100 சதவீதம் ஈடுபாட்டுடன் உழைக்க வேண்டும். ரசிகர்களின் தீர்ப்பு நம் கையில் இல்லை என்று என் கணவர் நாக சைதன்யா கூறியதை பின்பற்றுகிறேன். வேலை குறித்து கணவருடன் பேசுவது இல்லை. என் பட ஸ்க்ரிப்ட் குறித்து அவரிடம் பேச மாட்டேன். வேலையையும், குடும்பத்தையும் மிக்ஸ் செய்ய மாட்டோம் என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

சாவித்ரி

சாவித்ரி

நடிகையர் திலகம் சாவித்ரி கணேசனின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநதியில் நடித்து முடித்துள்ளார் சமந்தா. படத்தில் அவர் பத்திரிகையாளராக நடித்துள்ளார்.

English summary
Actress Samantha said that she doesn't share her scripts with hubby Naga Chaitanya as he prefers not to mix work with personal life.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X