ஏங்க.. எனக்கு டிவிட்டர்ல அக்கவுண்ட்டே இல்லைங்க.. அது ஃபேக்கு.. யோகிபாபு டென்ஷன்!

சென்னை : எனக்கு ட்விட்டரில் அக்கவுண்ட் இல்லை அது ஃபேக் ஐடி யாரும் நம்ப வேண்டும் என்று யோகிபாபு கூறியுள்ளார்.

நகைச்சுவை கலைஞராக தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலமாகவும் வளர்ந்திருக்கும் யோகி பாபு சிறிய மற்றும் பெரிய பட்ஜெட் படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். அதே போல ரஜினி ,விஜய் ,அஜித் போன்ற முக்கிய நடிகர்களுடன் ஒரே நேரத்தில் நடித்தும் வருகிறார். எந்த பட்ஜெட் படம் என்றாலும் ஒரே மாதிரி தான் நடந்து கொள்வேன் நான் ஒவ்வொரு இடத்திலும் வேறுபாடுகளை காட்டமாட்டேன் என்று கூறியுள்ளார்.

 I dont have a Twitter account, says yogibabu

யோகிபாபு ட்விட்டரில் பல தகவல்களை பகிர்ந்து வருகிறார் என்றும் பரவாயில்லை யோகிபாபு ட்விட்டரில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார் என பலரும் நினைத்து வந்த நிலையில் அது ஃபேக் ஐடி அதை யாரும் பின் தொடர வேண்டாம் என்றும் எனக்கு ட்விட்டரில் அக்கவுண்ட்டே இல்லை என்று கூறியுள்ளார் யோகிபாபு.

ஃபேக் ஐடிகளுக்காக அஞ்சி பல பெரிய நடிகர்கள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களை தாங்களே ஆரம்பித்து விட்டனர் இருந்தும் யோகிபாபு அப்படி கணக்கு துவங்கினால் கூட அதை பயன்படுத்த நேரம் இருக்காது என்ற காரணத்தால் ட்விட்டர் பக்கத்தை இன்னும் துவங்காமல் இருக்கிறாராம்.

 I dont have a Twitter account, says yogibabu

தற்போது பிஸியாக நடித்து வரும் யோகிபாபுவுக்கு கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு என தொடர் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இருந்தும், தமிழில் மட்டும் பல படங்கள் ஒப்பந்தமாகி இருப்பதால் மற்ற மொழி படங்களை தொடர்ந்து ஓரங்கட்டி வருகிறாராம் யோகிபாபு . மேலும் அமீர்கானுடன் ராணுவ வீரராக நடிக்கும் வாய்ப்பும் சமீபத்தில் கிடைக்க அந்த வாய்ப்பையும் தவறவிட்டு விட்டாராம் யோகிபாபு.

 I dont have a Twitter account, says yogibabu

நான் கதைகளை தேடி போவதில்லை வாய்ப்பு கிடைக்கும் கதைகளில் நடித்து விடுவேன் என கூறியுள்ளார். இதுவரை ஒரு படத்தில் கூட கதை கேட்டு நடித்ததில்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும் ஒரு சில படங்களில் ஒரே ஒரு காட்சியில் கூட நட்புக்காக நடித்து இருக்கிறேன் நடித்தும் வருகிறேன் என கூறியுள்ளார்.

யோகிபாபு கல்யாணம் சில மாதங்களுக்கு முன் நடந்தது யாருக்கும் சொல்லாமல் நடந்து முடிந்த இந்த கல்யாணத்திற்கு சினிமா பிரபலங்களை அழைக்கவில்லை இதனால் ரிஷப்சன் ஒன்றை கூடிய விரைவில் நடத்த போவதாக யோகிபாபு கூறியிருக்கிறார் அந்த விழாவிற்கு அனைவரையும் அழைப்பேன் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X