»   »  நான் ஒன்னும் உங்களை மாதிரி இல்லை: ஆர்ஜே பாலாஜியை மீண்டும் விளாசிய லட்சுமி ராமகிருஷ்ணன்

நான் ஒன்னும் உங்களை மாதிரி இல்லை: ஆர்ஜே பாலாஜியை மீண்டும் விளாசிய லட்சுமி ராமகிருஷ்ணன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.ஜே. பாலாஜி உங்களை போன்று நான் மக்களை மதிப்பிடுவது இல்லை என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீண்டும் ட்வீட் போட்டுள்ளார்.

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், நிக்கி கல்ராணி, ஆனந்தி, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் கடவுள் இருக்கான் குமாரு. அந்த படத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை ஏகத்திற்கும் கலாய்த்துவிட்டார்.

இதனால் லட்சுமி பாலாஜி மீது கொலவெறியில் உள்ளார்.

லட்சுமி

லட்சுமி

பாலாஜி தனது நிகழ்ச்சியை கலாய்தது பற்றி அறிந்த லட்சுமி ராமகிருஷ்ணன் கோபத்தில் ட்விட்டரில் அவரை லெப்ட் அன்ட் ரைட் வாங்கிவிட்டார். ஜி.வி. பிரகாஷ், ராஜேஷையும் அவர் விளாசினார்.

பாலாஜி

பாலாஜி

லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் ருத்ரதாண்டவம் ஆடியபோதிலும் பாலாஜி அந்த பக்கமே வரவில்லை. இதுவரை பாலாஜி ட்விட்டர் பக்கம் வராமல் அமைதியாக உள்ளார்.

உங்களை போன்று இல்லை

பாலாஜி அமைதியாக இருக்கும் நேரத்தில் லட்சுமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, @fayas_mh @RishiAnand168 @RJ_Balaji @rajeshmdirector நான் உங்களை போன்று மக்களை மதிப்பிடுவது இல்லை. நான் இரு பக்க நியாயங்களையும் கேட்டு என் அனுபவத்தின் மூலம் அவர்களுக்கு வழிகாட்ட முயற்சிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

ஜி.வி. பிரகாஷ்

ஜி.வி. பிரகாஷ்

லட்சுமி ராமகிருஷ்ணன் தனது படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க ரெடியா என கேட்க ஜி.வி. பிரகாஷும் ஓகே சொல்லியுள்ளார். இதையடுத்து வரும் 27ம் தேதி லட்சுமி ஜி.வி.யை சந்தித்து கதை சொல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Lakshmi Ramakrishnan tweeted that she doesn't judge people like RJ Balaji and director Rajesh.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil