»   »  கமல்ஹாசன் எனக்கு அண்ணாச்சி மாதிரி... போட்டுத் தாக்கும் ஷகீலா!

கமல்ஹாசன் எனக்கு அண்ணாச்சி மாதிரி... போட்டுத் தாக்கும் ஷகீலா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் ஹாஸன் முத்தக் காட்சிகளில் நடிப்பது தனக்கு பிடிக்காது என்று நடிகை ஷகீலா தெரிவித்துள்ளார். மேலும் கமலை பார்த்தாலே தனக்கு உடல் உதறும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஷகீலா படம் வெளியாகிறது என்றால் ஒரு காலத்தில் மலையாள சூப்பர் ஸ்டார்களே அவர்களின் படங்களை வெளியிட மிரண்டார்கள். அப்படி கேரள ரசிகர்களை தனது கவர்ச்சியால் கட்டிப்போட்டு வைத்திருந்தார்.

இந்நிலையில் அவர் உலக நாயகன் கமல் ஹாஸன் பற்றி கூறியிருப்பதாவது,

கமல்

கமல்

கமல் ஹாஸனை பற்றிய அனைத்தும் எனக்கு பிடிக்கும். அவரை நான் ஒரு அண்ணனாக பார்க்கிறேன்.

முத்தம்

முத்தம்

கமல் ஹாஸன் கிஸ் பண்ணும் மேட்டர் தான் எனக்கு பிடிக்காது. எனக்கு அதை பார்க்க ரொம்ப வெட்கமாக இருக்கும். அதனால் அவரின் முத்தக் காட்சிகள் வந்தால் அண்ணனாச்சே எப்படி பார்ப்பது என்று முகத்தை திருப்பிக் கொள்வேன்.

அய்யய்யோ

அய்யய்யோ

அந்த முத்தக் காட்சி ஒன்றால் தான் தியேட்டருக்கு போவதில் சங்கடம். அய்யய்யோ கமலின் முத்தக் காட்சி வேற வருதா என்று இருக்கும். மத்தபடி அவரின் நடிப்பு, அவர் பேசுவதை பார்த்து பிரமித்து போவேன்.

தமிழ், ஆங்கிலம்

தமிழ், ஆங்கிலம்

கமல் என்ன அருமையாக ஆங்கிலம் பேசுவார். தமிழை எவ்வளவு அழகாக பேசுவார். அவரை பற்றி கூற நிறைய விஷயங்கள் உள்ளது. அவர் ஒரு லெஜன்ட்.

ராகவேந்திரா மண்டபம்

ராகவேந்திரா மண்டபம்

ஒரு முறை ரஜினிகாந்தின் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அங்கு கமல் வருவதை பார்த்ததும் நின்றுவிட்டேன்.

உதறுது

உதறுது

கமலிடம் போய் பேசலாம் என்றால் அவர் ஏதாவது கேட்டுவிடுவாரோ என்று எனக்கு உதறுது. அவரை சந்திக்க வேண்டும் என்றும் நினைப்பேன், சந்திக்கக் கூடாது என்றும் நினைப்பேன். அவரை அணுகினால் நிச்சயம் என்னை சந்திப்பார். ஆனால் நான் அவரை சந்திக்க பயப்படுகிறேன்.

English summary
Actress Shakeela told that she doesn't like Kamal Haasan's liplock scenes.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil