»   »  நிறைய பேசினா எதிரிகளைத்தான் சம்பாதிக்க வேண்டி வரும்! - ரஜினிகாந்த்

நிறைய பேசினா எதிரிகளைத்தான் சம்பாதிக்க வேண்டி வரும்! - ரஜினிகாந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil
காவேரி பிரச்சனை எதிர்த்து ரஜினி பரபரப்பு பேட்டி- வீடியோ

சென்னை: ஏற்கெனவே நிறைய பேசி பேசித்தான் அரசியல் பண்ணாங்க. நிறைய பேசினா எதிரிகளைத்தான் சம்பாதிக்க வேண்டி வரும் என்றார் ரஜினிகாந்த்.

சென்னை போயஸ் கார்டனில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் ரஜினிகாந்த். அப்போது தமிழகத்தின் இன்றைய கொந்தளிப்பான சூழல் குறித்த அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

I dont like to talk more in politics, says Rajinikanth

காவிரி மேலாண்மை வாரியத்தை எவ்வளவு துரிதமாக அமைக்க முடியுமோ அவ்வளவு துரிதமாக அமைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்தார்.

அதேபோல ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தும்போது ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் அல்லது எதிர்ப்பைக் காட்டும் வகையில் கருப்புத் துணி காட்ட வேண்டும் என்றார். இன்னொரு படி மேலேபோய், ஐபிஎல் நிர்வாகம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர்கள் தங்கள் அணியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் அவர் பேசினார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருந்தனர். அப்போது ரஜினிகாந்த், "பாருங்க... நிறையப் பேசிக் கொண்டே இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏற்கெனவே நிறைய பேசிப் பேசித்தான் அரசியல் பண்ணாங்க. நிறைய பேசினா எதிரிகளைத்தான் சம்பாதிக்க வேண்டி இருக்கும்...," என்று கூறிவிட்டு பேட்டியை முடித்தார்.

English summary
In a Press meet, Rajinikanth says that he won't like to speak more in politics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X