»   »  மைக் வச்சு ஊருக்கெல்லாம் சொல்ல முடியாது: ஸ்ருதி ஹாஸன்

மைக் வச்சு ஊருக்கெல்லாம் சொல்ல முடியாது: ஸ்ருதி ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது காதல் வாழ்க்கை பற்றி பேச முடியாது என்று நடிகை ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ருதி ஹாஸனும், லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கார்செலும் காதலிப்பதாக கடந்த சில மாதங்களாக பேசப்படுகிறது. காதலர் தினத்தை ஸ்ருதியுடன் கொண்டாட மைக்கேல் மும்பை வந்தார்.


அதன் பிறகு ஸ்ருதி லண்டன் சென்று மைக்கேலை சந்தித்தார்.


திருமணம்

திருமணம்

மைக்கேலும், ஸ்ருதியும் சீரியஸாக காதலிப்பதாகவும், இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்றும் பாலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.


ஸ்ருதி

ஸ்ருதி

காதல் பற்றி ஸ்ருதியிடம் கேட்டால், நான் எப்பொழுதுமே காதலில் உள்ளேன். என் வாழ்க்கையை காதலிக்கிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நான் பேசுவது இல்லை. என் பெற்றோருக்கு என்னை பற்றி அனைத்தும் தெரியும் என்றார்.


நடிகை

நடிகை

நான் ஒரு நடிகை என்பதால் என் தனிப்பட்ட வாழ்க்கையை அனைவரும் உற்று கவனிக்கிறார்கள். அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. இந்த துறைக்கு வந்தால் அப்படித் தான் என்கிறார் ஸ்ருதி.


சினிமா

சினிமா

நான் நடிக்க வந்த புதிதில் பதட்டமாக இருந்தேன். அதை மக்கள் தவறாக புரிந்து கொண்டார்கள். ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளும்போது அமைதியாக இருப்பது நல்லது. ஆனால் அதை தவறாக புரிந்து கொள்கிறார்கள் என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார்.


English summary
Actress Shruti Haasan said that she doesn't discuss about her private life in public. She added that her parents know every thing about her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil