»   »  பெண்ணாக தோன்ற 'அது' தேவையில்லை: பெண்ணாக மாறிய நடிகர் கவுரவ் அரோரா பேட்டி

பெண்ணாக தோன்ற 'அது' தேவையில்லை: பெண்ணாக மாறிய நடிகர் கவுரவ் அரோரா பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பெண்ணாக உணர, காணப்பட பெண்ணுறுப்பு தேவை இல்லை என்று ஆணாக இருந்து பெண்ணாக மாறியுள்ள நடிகர் கவுரி(கவுரவ்) அரோரா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகரும், மாடலுமான கவுரவ் அரோரா கடந்த ஓராண்டுக்கு முன்பு ஸ்பிளிட்ஸ்வில்லா என்னும் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தான் ஒரு ஆண் அல்ல பெண் என்பதை அவர் உணர்ந்தார்.

I don’t think I need a vagina to look feminine: Actor Gauri (Gaurav) Arora

இதையடுத்து அவர் பெண்ணாக மாறி வருகிறார். கவுரவ் கனது பெயரை கவுரி என மாற்றியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

பெண்ணாக மாற மருந்துகள் சாப்பிட்டு வருகிறேன். நான் பெண்ணாக மாறத் தேவைப்படும் அறுவை சிகிச்சைக்கு நான் உடல் ரீதியாக தயாராகிவிட்டதாக மருத்துவர்கள் நினைத்தால் அதை செய்வேன். அதற்கு 1 முதல் 2 ஆண்டுகள் ஆகும்.

பெண்ணாக தோன்ற, உணர பெண்ணுறுப்பு தேவையில்லை. பெண்ணாக மாறியதை நினைத்து வெட்கப்படவில்லை. எனக்கு நானே பிறப்பு அளித்துள்ளேன். பெண்ணாக மாற நான் பலமுறை முயற்சித்தேன். ஆனால் பெற்றோர் மற்றும் சமூகத்தால் முடியவில்லை. இதனால் தற்கொலைக்கு கூட முயன்றுள்ளேன் என்றார்.

Read more about: female பாலிவுட்
English summary
Actor Gauri(Gaurav) Arora said that he doesn't need a vagina to look feminine.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil