»   »  விவேக் சார், எனக்கு அந்த ரூ.500 கோடியில பங்கு வேண்டாம் என்சாய்: கார்த்தி குசும்பு

விவேக் சார், எனக்கு அந்த ரூ.500 கோடியில பங்கு வேண்டாம் என்சாய்: கார்த்தி குசும்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விவேக்கிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கார்த்தி தனது கோயம்புத்தூர் குசும்பையும் காட்டியுள்ளார்.

கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, விவேக், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்த காஷ்மோரா படம் ஹிட்டானது. கார்த்தி கஷ்டப்பட்டு கெட்டப்பை மாற்றி நடித்தது வீண் போகவில்லை.

I don't want share in that Rs. 500 crore Vivekh: Tweets Karthi

காஷ்மோரா படத்தில் கார்த்தியின் அப்பாவான விவேக் தனது வீட்டில் அமைச்சர் மறைத்து வைத்த ரூ.500 கோடியுடன் ஓடிவிடுவார். பின்னர் கார்த்தி அவரை பிடித்துவிடுவார்.

இந்நிலையில் கார்த்தி விவேக்கிற்கு ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து கூறியபோது கூட அந்த ரூ.500 கோடியை மறக்காமல் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் கொடுத்த ரூ.500 கோடியில எனக்கு ஷேர் வேண்டாம். நீங்களே வச்சுக்கோங்க! என்சாய்! என ட்வீட்டினார்.

இதை பார்த்த ரசிகர்கள் இது தான் கார்த்தியின் கோயம்புத்தூரு குசும்பு என்று தெரிவித்தனர்.

English summary
Actor Karthi couldn't forget one scene from his hit movie Kashmora while wishing Vivekh a happy birthday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil