twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குநராக முதல் சம்பளம் ரூ.3000 மட்டுமே...லோகேஷ் கனகராஜ் சொன்ன சுவாரஸ்ய தகவல்

    |

    சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் தாறுமாறாக வெற்றி பெற்று வருகிறது

    மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது

    அடுத்ததாக கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் இயக்குனராக முதல் சம்பளம் வாங்கிய அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.

    மிரட்டலாக வெளியாகும் கோலிவுட் படங்கள்... எதிர்பார்த்த அந்த படமும் லிஸ்டில் வந்துடுச்சு!மிரட்டலாக வெளியாகும் கோலிவுட் படங்கள்... எதிர்பார்த்த அந்த படமும் லிஸ்டில் வந்துடுச்சு!

    நம்பிக்கைக்குரிய இயக்குனர்

    நம்பிக்கைக்குரிய இயக்குனர்

    சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்திருக்க வேண்டும் என்ற காலகட்டம் போய் இப்பொழுது யார் வேண்டுமானாலும் திறமை இருந்தால் இயக்குனர் ஆகலாம் என்ற ட்ரெண்ட் உருவாகி உள்ளது. அந்த வகையில் வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் குறும்படங்கள் மூலம் அசத்திக் காட்டி இப்போது தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவராக உள்ளார்.

    கைதி 2

    கைதி 2

    முதல் படமாக மாநகரம் என்ற படத்தை இயக்கினார் ஆக்சன் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. ஸ்ரீ மற்றும் சந்தீப் கிஷான் இருவரும் இணைந்து படத்தில் நடித்திருக்க இப்படம் வெற்றி பெற்றது. மாநகரம் வெற்றியைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தை இயக்கினார். இந்திய அளவில் பெரிதும் கவனிக்கக் கூடிய படமாக மாநகரம் ஆனது.

    இது இப்பொழுது பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. கைதி பாகம் இரண்டும் உருவாக உள்ளது என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்

    கமல் நடிப்பில் விக்ரம்

    கமல் நடிப்பில் விக்ரம்

    தமிழ் சினிமாவில் ஆல் டைம் வசூல் மன்னனாக இருந்த வரும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியானது. கொரோனா சூழலுக்கு மத்தியிலும் வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு பெரும் வசூலை வாரி குவித்தது. மாஸ்டரைத் தொடர்ந்து தனது கலையுலக குருவான உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தை தற்போது இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. அதைத் தொடர்ந்து தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

    முதல் சம்பளம் 3000

    முதல் சம்பளம் 3000

    இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்குனராக தான் வாங்கிய முதல் சம்பளம் பற்றி பகிர்ந்துள்ளார். அதாவது வங்கியில் பணியாற்றி கொண்டிருக்கும் போது வங்கி நண்பர்களுடன் இணைந்து குறும்படங்களை இயக்கி வந்த லோகேஷ் கனகராஜ்க்கு உதவியாக அந்த வங்கியின் வைஸ் ப்ரெசிடென்ட் ஆக பணிபுரிந்த கணேசன் என்பவர் 3000 ரூபாய் கொடுத்து நீ நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் முதல் சம்பளம் நான் கொடுத்ததா இருக்கட்டும் எனக் கூறியுள்ளார் . எனவே அவர் இயக்குனராக வாங்கிய முதல் சம்பளம் 3000 ரூபாய் அதை அவரது வங்கி வைஸ் ப்ரெசிடென்ட் கணேசன் வழங்கியுள்ளார் என்பதை லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.

    English summary
    I got My First Salary of 3000 Rupees as a Director Says Lokesh Kanagaraj
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X