»   »  எம்ஜிஆர் ரஜினியைப் பார்த்து என்னை வளர்த்துக் கொண்டேன்! - பிரபுதேவா

எம்ஜிஆர் ரஜினியைப் பார்த்து என்னை வளர்த்துக் கொண்டேன்! - பிரபுதேவா

Posted By:
Subscribe to Oneindia Tamil

எம்ஜிஆர், ரஜினி படங்களைப் பார்த்துதான் என்னை சினிமாவில் வளர்த்துக் கொண்டேன் என்று பிரபு தேவா கூறினார்.

நடன இயக்குநராக அறிமுகமாகி, நடிகராக மாறி, பின்னர் இயக்குநராக உயர்ந்த பிரபுதேவா இப்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

சமீபத்தில் சென்னை வந்த அவர் அளித்த ஒரு பேட்டியில் தனது திரையுலகப் பிரவேசம், இந்திப் பட அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார்.

சினிமா பார்க்க...

சினிமா பார்க்க...

அதில், "எனக்கு சினிமா பார்க்க மிகவும் பிடிக்கும். தி லார்ட் ஆஃப் தி ரிங், தி அவெஞ்சர்ஸ், சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், மிஷன் இம்பாஸிபிள், ஜேம்ஸ் பாண்ட் படங்கள் என இந்த உலகை காப்பாற்றும் ஹீரோக்களின் படங்கள் என்றால் மிகவும் இஷ்டம்.

எம்ஜிஆர், ரஜினி...

எம்ஜிஆர், ரஜினி...

பார்வையாளர்களை மகிழ்ச்சிப் படுத்துவதே என் வேலை. பெரிய திரை என்றுதானே சொல்கிறோம். வாழ்க்கையை விட பெரிய விஷயங்கள் சினிமாவில் தானே நடக்கும். மேலும் எம்.ஜி.ஆர், ரஜினி போன்ற நடிகர்களைப் பார்த்துத் தான் என்னை நான் வளார்த்துக் கொண்டேன். இவர்களுடைய படங்களை பார்க்கையில் கண்டிப்பாக நாம் எல்லாவற்றையும் மறந்துவிடுவோம். எனக்கு எண்டர்டெயிண்ட்மெண்ட் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.

என் படமும் இப்படித்தான்...

என் படமும் இப்படித்தான்...

எனவே நான் இயக்கும் படங்களிலும் இதுபோன்ற பொழுதுபோக்குகள் அதிகம் இருக்கும். சினிமா என்பது பொழுதுபோக்கத்தானே!

ஆக்ஷன் ஜாக்சன் தோல்வி குறித்து..

ஆக்ஷன் ஜாக்சன் தோல்வி குறித்து..

ஆக்ஷன் ஜாக்ஸன் படம் தோல்வியடைந்தது குறித்து இப்போது மிகவும் பேசுகிறார்கள். அது வருத்தமாகத்தான் உள்ளது. ஆனால் தோல்வி என்பது புதிதல்லவே..

இயக்குநர் வேலை இனிமையாக இருக்கிறது..

இயக்குநர் வேலை இனிமையாக இருக்கிறது..

நடனம், நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என பல வேலைகளைச் செய்தாலும், படம் இயக்குவதை இனிமையான அனுபவமாக உணர்கிறேன். அதிக டென்ஷன், பொறுப்பு மிக்க வேலைதான் என்றாலும் விரும்பிச் செய்கிறேன்," என்றார்.

English summary
Acto Prabhu Deva says that he grown up with MGR and Rajini movies.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil