ராஜு பண்றது தாங்க முடியல...புறம் பேச துவங்கிய பிரியங்கா – அபிஷேக்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் பதினோறாம் நாளான இன்று, நிரூப், அபினவ், நாடியா சாங் ஆகியோர் தங்களின் கதைகளை கூறினர். இதில் நிரூப், யாஷிகா ஆனந்த் பற்றி ஓப்பனாக பேசியது பலரையும் ஆச்சரியப்பட வைத்ததுடன், பாராட்டவும் வைத்தது. இருந்தாலும் அவருக்கு 13 பேர் டிஸ்லைக்கை லைக் போல் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து விஜயதசமி தினத்தை கொண்டாடும் படி பிக்பாஸ் டாஸ்க் கொடுத்தார். இதற்காக நாடகம் ஒன்றை நடத்தவும், அது தாமரை தலைமையில் நடத்த வேண்டும் என கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்குவார் என கூறப்பட்டது.

I had jellous on Raju, Priyanka openly said to Abishek

இதனால் ஐக்கியும், நிரூப்பும் ராப் மியூசிக்கில் பக்தி பாடல் இயற்றினர். இசைவாணி, இதிலாவது என்னை சேர்த்துக் கொள்ளுங்கள் என சுருதி மற்றும் பாவனியிடம் கேட்டுக் கொண்டார். பாவனி, தான் வேலை செய்வதை பலர் வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருப்பதாக சுருதியிடம் குறை கூறினார். அப்போது பிரியங்காவும், அபிஷேக்கும் கார்டன் ஏரியாவில் தனியாக சென்று பேசிக் கொண்டனர்.

அங்கு பெரிய குழு ஒன்று பயங்கரமாக தயாராகிக் கொண்டிருக்கிறது என்றார் அபிஷேக். அதை பார்த்து உனக்கு வயிற்றெரிச்சலாக உள்ளதா என கேட்கிறார். எனக்கு இல்லை உனக்கு தான் வயிற்றெரிச்சலாக உள்ளது என்கிறார் அபிஷேக். அதை இல்லை என சமாளிக்கும் பிரியங்கா, வயிற்றெரிச்சல் கிடையாது. பொறாமையாக உள்ளது என்கிறார்.

எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து பேசினால் அது குழப்பம் தான் வரும். எப்படியும் அவன் ஒன்று சொல்ல, நாம் ஒன்று தான் செய்ய போகிறோம் என்பது மட்டும் கன்ஃபார்மாக தெரியும். அவனாக கதை தயாரிக்கிறேன் என்று தலைமை எடுத்துக் கொண்டான். சரி அவனுக்கு அதில் திறமை உள்ளது என்பதால் விட்டுவிட்டேன் என்று ராஜு பற்றி அபிஷேக் மற்றும் பிரியங்கா பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

திறமையை ஏற்றுக் கொள்ளாமல் ஏன் பொறாமைப்படுகிறாய் என்று கேட்கிறார் அபிஷேக். அதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதை தாண்டி அவன் செய்யும் வேலைகள் இருக்கே. அதே தான் தாங்கல முடியல என்கிறார் பிரியங்கா.

பிக்பாஸ் வீட்டில் இதுவரை ஒருவர் செய்தது பற்றி, மற்றவரிடம் வருத்தப்பட்டு உணர்வுகளை பகிர்ந்து கொண்ட சம்பவம் தான் நடந்துள்ளது. ஆனால் முதல் முறையாக அபிஷேக்கும், பிரியங்காவும் ராஜுவின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்து, புறம் பேசுவதை துவக்கி வைத்துள்ளனர். அதுவும் ராஜு மீது பொறாமையாக உள்ளது என பிரியங்கா ஓப்பனாக சொல்லி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X