»   »  தமிழனாக, இந்தியனாக வெட்கி தலை குனிகிறேன்: பாடகர் ஸ்ரீனிவாஸ் கோபம்

தமிழனாக, இந்தியனாக வெட்கி தலை குனிகிறேன்: பாடகர் ஸ்ரீனிவாஸ் கோபம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
நடிகர் சங்க நிகழ்ச்சிகளில் கலந்துக்கிறதில்லை - பாரதிராஜா விளக்கம்- வீடியோ

சென்னை: ஒரு தமிழனாக வெட்கி தலைகுனிவதாக பாடகர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராடி வரும் மக்களின் எதிர்ப்பை அடுத்து சென்னையில் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பாடகர் ஸ்ரீனிவாஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

அதிருப்தி

அதிருப்தி

என் அணி முதல் இரண்டு போட்டிகளில் எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்த நிலையில் ஒரு சிஎஸ்கே ரசிகனாக அதிருப்தி அடைந்துள்ளேன். நம் கஷ்டங்களை எல்லாம் மறந்து மகிழ வைப்பது கலையும், விளையாட்டும். கேதர் ஜாதவ், பில்லிங்ஸ், பிராவோ மற்றும் ஜடேஜா ஆகியோர் சிறப்பாக விளையாடி நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் சென்றனர். இது தான் விளையாட்டு அல்லது கலையை ஸ்பெஷலாக்குவது.

வெட்கம்

என் சகோதரர்கள் செய்த காரியத்திற்காக ஒரு தமிழனாக வெட்கி தலை குனிகிறேன். மனிதர்களாக, கலைஞர்களாக நான் விரும்பும் மக்களும் இந்த வன்முறைக்கு காரணம் என்பதால் வெட்கி தலை குனிகிறேன். ஒரு புலி வாலை பிடித்துவிட்டு அடுத்து என்ன நடக்கும் என்று உறுதி அளிக்க முடியாததால் ஒரு தமிழனாக வெட்கி தலை குனிகிறேன்.

வன்முறை

வன்முறை

சில சகோதரர்கள் அன்பை மறந்து வன்முறையால் அழிவு தான் நேரும் என்பதை மறந்ததால் வெட்கி தலை குனிகிறேன். முன்பு நடந்ததில் இருந்து பாடம் கற்காததால் வெட்கி தலை குனிகிறேன். வெட்கி தலை குனிகிறேன்.

தண்ணீர்

தண்ணீர்

காவிரி பற்றி உருப்படியாக பேசுவோம். தமிழகத்திற்கு இவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்மானித்ததை கர்நாடகா ஏற்கவில்லை. இதில் தலையிட வேண்டிய மத்திய அரசு கர்நாடக தேர்தலை மனதில் வைத்து தலையிடாமல் உள்ளது. இம்முறை ஒரு இந்தியனாக வெட்கி தலை குனிகிறேன்.

பொறுப்பு

இது பல தலைமுறைகளாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு அனைத்து கட்சிகளுமே பொறுப்பு. பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகியவை தங்கள் நலனுக்காக மக்களை பகுதி, மொழி வாரியாக பிரித்துவிட்டன. இது அரசியல்வாதி ஆடும் விளையாட்டு. அவர்களுக்கு வெட்கம் என்பதே இல்லை. அரசியல்வாதிகள் இல்லாமல் தமிழக, கர்நாடக மக்கள் எப்படி தீர்வு காண முடியும் என்று தெரியவில்லை. அன்பு மட்டுமே வழி. அரசியல் கட்சிகளை புறக்கணியுங்கள் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீனிவாஸ்.

English summary
Singer Srinivas said that 'As a CSK fan I feel gutted.. Especially when my team has given me so much joy in the first two matches. Art and sport are things that make you forget the miserable nature of our lives and make us happy ..'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X