Don't Miss!
- News
யார் இந்த கே.எஸ்.தென்னரசு? அதிமுகவில் கடந்து வந்த பாதை என்ன? எடப்பாடி டிக் செய்தது எப்படி?
- Technology
84 நாட்கள் வேலிடிட்டி உடன் அதிக சலுகைகளை வழங்கும் Airtel இன் பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
- Finance
நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள்..பட்ஜெட்டுக்கு முன்பு 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என் தகுதிக்கு சிம்ரனுக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன்.. நடிகர் கருணாஸ் சர்ச்சை பேச்சு!
சென்னை : நாட்டுப்புற பாடல்கள் மூலம் பிரபலமான கருணாஸ் அதன் பிறகு படங்களில் காமெடியனாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்
காமெடியனாக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் குணச்சித்திர வேடங்களிலும் மிக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்த கூடியவர் நடிகர் கருணாஸ்
சமீபத்தில் பட விழா ஒன்றில் பேசிய கருணாஸ் என் தகுதிக்கு சிம்ரனுக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் என ஓபனாக பேசியுள்ளார்
ராஜமௌலியை புகழ்ந்த சிரஞ்சீவி… ஆச்சார்யா படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா ?

தவிர்க்க முடியாத காமெடியனாக
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான காமெடியனாக உள்ளவர் நடிகர் கருணாஸ் நாட்டுப்புற பாடல்கள் பாடி ரசிகர்களை வசீகரித்தவர் முதல் முறையாக பாலாவின் இயக்கத்தில் வெளியான நந்தா படத்தில் காமெடியனாக நடித்து அறிமுகம் செய்யப்பட்டார் நந்தா படத்தில் துறுதுறுப்பான காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிகவும் ரசிக்க வைத்த கருணாஸுக்கு அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தது அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியனாக மாறினார்.

ஹீரோவாக அறிமுகம்
2008 ஆம் ஆண்டு வெளியான திண்டுக்கல் சாரதி என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்தார். மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற வடக்குநோக்கியன்ரம் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக வெளியான இந்தப் படத்தை சிவ சண்முகன் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

திண்டுக்கல் சாரதி
தான் அழகாக இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவர் அழகான மனைவியை திருமணம் செய்து கொண்டால் சந்தேகத்தால் எவ்வாறெல்லாம் நடந்து கொள்வார் என்ற கதையை மையமாகக் கொண்டு வெளியான திண்டுக்கல் சாரதி படத்தில் நடிகர் கருணாஸ் மிக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்த படத்தில் கருணாஸுக்கு ஜோடியாக நடிகை கார்த்திகா நடித்திருப்பார். காதல் காமெடி சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஃபேமிலி என்டர்டைன்மென்ட் படமாக வெளியான திண்டுக்கல் சாரதி மிகப்பெரிய வசூலையும் அள்ளியது. தினாவின் இசையில் திண்டுக்கல்லு திண்டுக்கல்லு பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது

சிம்ரனுக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன்
இவ்வாறு கருணாஸ் ஹீரோவாக நடித்த முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் கருணாஸுக்கு ஜோடியாக முதலில் நடிக்க இருந்தவர் நடிகை சிம்ரன் தானாம். படக்குழு முதலில் கருணாஸுக்கு ஜோடியாக நடிகை சிம்ரனை தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய இருந்தார்களாம் ஆனால் அதைக் கேள்விப்பட்ட கருணாஸ் என் தகுதிக்கு நான் சிம்ரனுடன் ஜோடியாக நடிக்க மாட்டேன்.

குற்ற உணர்ச்சியில் இருக்கும் கணவன்
சிம்ரனை வேண்டாம் என்று சொன்னேன். ஏனென்றால் என்ன மாதிரி ஒருத்தனுக்கு பாக்க நல்லா இருந்தாலே அது பெரிய அழகியா தெரியும். அப்படி இருக்கும்போதே தன்னை விட அழகாக இருக்கும் மனைவி தன்னை விட்டு போய் விடுவாள் என்ற குற்ற உணர்ச்சியில் கணவன் நடந்து கொள்வது தான் இப்படத்தின் கதையை ஆனால் அப்படி இருக்கையில் சிம்ரன் மாதிரி மிகப் பெரிய ஹீரோயினை வைத்தால் அவளே ஆட்டோமேட்டிக்கா ஓடிப் போய்விடுவாள் என நினைப்பாங்க அதனால் சிம்ரன் வேண்டாமென சொன்னேன் என கருணாஸ் சமீபத்தில் படவிழாவில் ஒன்றில் ஓப்பனாக பேசியுள்ளார்.