Don't Miss!
- News
தமிழுக்கு மாபெரும் "கவுரவம்".. ஹஜ் யாத்திரையின் அரஃபா உரையை தமிழிலும் மொழிபெயர்க்க சவூதி அரசு முடிவு
- Sports
இங்கிலாந்தை நாக் அவுட்டாக்கிய சிராஜ்.. பலமான நிலையில் இந்திய அணி.. வெற்றி வாய்ப்பு எப்படி?
- Finance
இட்லி விற்றவர் இன்று லட்சங்களில் வருமானம்.. சாதனை படைத்த தேன்மொழி..!
- Technology
முதல் மேட்-இன்-இந்தியா ஆட்டோனோமாஸ் விமானத்தை உருவாக்கி சோதனை! அதிகரிக்கும் தாக்குதல் சக்தி
- Automobiles
ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!
- Lifestyle
வார ராசிபலன் 03.06.2022-09.07.2022 - இந்த வாரம் திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.....
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
"32 நாட்கள் கமலுக்கு நான் தான் மேக்கப் போட்டேன்" - போட்டுடைத்தார் இயக்குநர் லோகேஷ்
சென்னை: விக்ரம் படப்பிடிப்பில் 32 நாட்கள் கமலுக்கு தான் மேக்கப் போட்டதாக அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.
மேக்கப் கலையைக் கற்றுத் தேர்ந்தவரான கமல்ஹாசனிடம் தானும் அதனைக் கொஞ்சம் கற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
தனியார் ஊடகம் ஒன்றிற்கு லோகேஷ் அளித்துள்ள பேட்டியில், ஜூன் 3 ம் தேதி வெளியாகவிருக்கும் விக்ரம் திரைப்படம் குறித்து பல சுவாரசியமான தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்.
கேன்ஸ் பட விழாவில் வெளியான டாம் குரூஸின் ’டாப்கன் மேவ்ரிக்’ மூவி...இந்தியாவில் எப்போது ரிலீஸ்?

தனக்குத் தானே மேக்கப்
நடிகர் கமல் எப்போதும் தனக்குத் தானே மேக்கப் போட்டுக் கொள்பவர். மேக்கப் கலையின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர். இந்நிலையில் விக்ரம் படத்தில் அவருக்கு முகத்தில் இரத்த காயம் இருப்பது போன்ற மேக்கப்பை தான் போட்டுவிடுவதாகவும் தங்களிடம் அதனைக் கற்றுக் கொள்ள விரும்புவதாகவும் லோகேஷ் கேட்க, அதற்கு ஓகே சொன்ன கமல், 32 நாட்கள் லோகேஷை மேக்கப் போட அனுமதித்திருக்கிறார். அப்போது தனக்குத் தெரிந்த பல வித்தைகளையும் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

இயக்கத்தில் மூக்கை நுழைக்காத கமல்
கமல் தனது படங்களில் திரைக்கதை முதல் இசையமைப்பு வரை எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து அதை தனக்குப் பிடித்தது போல் மாற்றுவார் என சினிமாவில் பல காலமாக ஒரு கருத்து நிலவி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் விக்ரம் படத்தில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் கமல் தனது வேலையை மட்டும் செய்துவிட்டு வேறு எந்த விவகாரத்திலும் தலையிடாமல் தனக்கு முழு சுதந்திரம் கொடுத்ததாகவும் லோகேஷ் கூறியிருக்கிறார்.

அதிரடி ஸ்டண்ட் காட்சிகள்
விக்ரம் படத்தில் அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் பல இடம்பெற்றுள்ள நிலையில் அவற்றில் காட்டப்படும் துப்பாக்கிகள் குறித்த பல விஷயங்களைக் கமலிடம் இருந்து தெரிந்து கொண்டதாகவும் லோகேஷ் அப்பேட்டியில் கூறியிருக்கிறார்.

விதவிதமாக டயலாக் பேசிய கமல்
படத்தின் டீசரில் கமல் சொல்லும் 'ஆரம்பிக்கலாங்களா' என்ற டயலாக் மிகவும் வைரல் ஆனது. அந்த டயலாக்கை பல விதங்களில் சொல்லிக் காட்டியிருக்கிறார் கமல். அவற்றில் எல்லாமே ரசிக்கும் படி இருக்க எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் இருந்ததாகவும் லோகேஷ் தெரிவித்திருக்கிறார். அதே படத்தில் கமலின் முந்தைய படங்களில் அவர் செய்த கதாப்பாத்திரம் அந்த டயலாக்கை பேசினால் எப்படி இருக்குமென பேசிக் காட்டச் சொல்லியும் தாங்கள் மிகவும் ரசித்ததாக லோகேஷ் அப்பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.