»   »  நயனதாராவையும் மறந்து விட்டேன், ரமலத்துடனும் தொடர்பில்லை... பிரபுதேவா

நயனதாராவையும் மறந்து விட்டேன், ரமலத்துடனும் தொடர்பில்லை... பிரபுதேவா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மனைவி ரமலத்துடன் எனக்கு எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை. அதேபோல நயனதாராவுடனான காதலையும் மறந்து விட்டேன். இப்போது தனியாகத்தான் இருக்கிறேன், சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகர்-இயக்குநர் பிரபுதேவா.

ஒரு நாளிதழுக்கு பிரபுதேவா பேட்டி கொடுத்துள்ளார். மனம் திறந்து அதில் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். தனது திருமணம், விவாகரத்து, நயனதாரா குறித்தும் அவர் அதில் பேசியுள்ளார்.

ரமலத்தை காதலித்து பின்னர் மணந்தது, பள்ளிப் பருவத்தில் தான் மோசமான மாணவனாக இருந்தது, நயனதாராவைக் காதலித்துப் பின்னர் பிரிந்தது என்று மலரும் நினைவுகளை அசை போட்டுள்ளார் பிரபுதேவா.

நான் பெரிய இயக்குநர் அல்ல

நான் பெரிய இயக்குநர் அல்ல

இந்தி பட உலகுக்கு முன்பே வர ஆசைப்பட்டேன். சரியான நேரத்தில் என் ஆசை நிறைவேறி இருக்கிறது. நான், பெரிய டைரக்டர் அல்ல. என்னை விட பெரிய டைரக்டர்கள், சாதித்தவர்கள் நிறைய பேர் இந்தி பட உலகில் இருக்கிறார்கள்.

ஏன் மும்பையில் குடியேற்றம்

ஏன் மும்பையில் குடியேற்றம்

இந்தி பட வேலைகள்தான் காரணம். ஒரு படம் தொடங்குவதற்கு முன்பு ஏகப்பட்ட வேலைகள் உள்ளன. நடிகர்-நடிகைகள் தேர்வு, மேக்கப் டெஸ்ட், உடையலங்காரத்துக்கு அனுமதி என நிறைய வேலைகள் இருக்கிறது. அதையெல்லாம் சென்னையில் இருந்து கொண்டு செய்ய முடியாது.

வாழ்க்கையில்தான் பாதிப்பு, தொழில் பாதிக்கவில்லை

வாழ்க்கையில்தான் பாதிப்பு, தொழில் பாதிக்கவில்லை

என் சொந்த வாழ்க்கையில் சில பாதிப்புகள் ஏற்பட்டது உண்மை. ஆனால், அது என் தொழிலை பாதிக்கவில்லை. கடவுள் அருளால், தொழில் நன்றாகவே நடக்கிறது.

ஸ்ரீதேவி வீட்டுக்காரர் பெரிய மனசுக்காரர்

ஸ்ரீதேவி வீட்டுக்காரர் பெரிய மனசுக்காரர்

மும்பையில், ஜூஹு கடற்கரையில் உள்ள போனிகபூரின் பழைய வீட்டில் வாடகைக்கு குடியிருக்கிறேன். அந்த வீட்டை அவர் பரந்த மனதுடன் எனக்கு கொடுத்து இருக்கிறார்.

நான் மோசமான மாணவன்

நான் மோசமான மாணவன்

பள்ளி பருவத்தில் படிப்பில் நான் மிக மோசமான மாணவனாக இருந்தேன். பதினொன்றாம் வகுப்பில், பெயில் ஆகிவிட்டேன். பள்ளியில் பெயில் ஆன ஒரே மாணவன் நான்தான். அதன்பிறகு என் தந்தை சுந்தரம் மாஸ்டரிடம் உதவியாளராக சேர்ந்து விட்டேன்.

பியூன் வேலைதான் எனக்கெல்லாம்

பியூன் வேலைதான் எனக்கெல்லாம்

நான் டான்ஸராகவோ அல்லது நடிகராகவோ ஆயிருக்காவிட்டால், ஏதாவது ஒரு அலுவலகத்தில் பியூன் ஆகியிருப்பேன். அல்லது போக்குவரத்து போலீஸ்காரராகி இருப்பேன். என்னிடம் உள்ள குறைந்த தகுதிக்கு இதுதான் நடந்திருக்கும்.

நயனதாராவைத் திட்டாதீர்கள்

நயனதாராவைத் திட்டாதீர்கள்

எனது வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு நயனதாராவைத் திட்டுவது மிகப்பெரிய தவறு. யாரும், எதற்கும் காரணம் அல்ல. கடவுள் காட்டிய வழி இது. இதை கடவுள் விரும்பி இருக்கிறார். இந்த விஷயத்தில், எனக்கு நல்ல அனுபவம் கிடைத்து இருக்கிறது. மனமுதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. நடந்தது எல்லாமே நன்மைக்காக என்று புரிந்து கொண்டேன். என் வாழ்க்கையில் ஏற்பட்ட உயர்வு, தாழ்வு, சந்தோஷம், வலி எல்லாவற்றுக்குமே நான்தான் காரணம். கடவுள் இந்த வழியை விரும்பியிருக்கிறார்.

நயனதாராவை மறந்து விட்டேன்

நயனதாராவை மறந்து விட்டேன்

நயன்தாராவுடனான உறவு முடிந்து போன விஷயம். நான் அதை மறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இப்போது நான் தனிமையில் இருந்தாலும், பிஸியாக இருக்கிறேன். இது, எனக்கு பிடித்து இருக்கிறது.

ரமலத்துடன் பேச்சே கிடையாது

ரமலத்துடன் பேச்சே கிடையாது

ரமலத்துடன் நடந்தது காதல் திருமணம். எது நடந்தாலும் அது கடவுள் விருப்பப்படி நடந்தது என்று புரிந்து கொண்டேன். எங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை கிடையாது. ஆனால், என் மகன்கள் ரிஷி ராகவேந்திரா, ஆதித் ஆகிய இருவருடனும் தொடர்பில் இருக்கிறேன். தினமும் அவர்களுடன் பேசுகிறேன் என்றார் பிரபுதேவா.

English summary
I have already forgot the issue of Nayanthara and I am not seeing anybody, not even talking to my ex wife Ramlath, says Prabudeva.
Please Wait while comments are loading...