»   »  பிக் பாஸுக்கு அடிமையாகிவிட்டேன்: ட்வீட்டிய நடிகை

பிக் பாஸுக்கு அடிமையாகிவிட்டேன்: ட்வீட்டிய நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடிமையாகிவிட்டதாக நடிகை மீஷா கோஷல் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்க்க பார்க்கத் துவங்கியவர்கள் தற்போது அதை பார்க்காமல் இருக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டனர். சில திரையுலக பிரபலங்களும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடிமையாகிவிட்டனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பிரபலங்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

மீஷா

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடிமையாகிவிட்டேன் என்று நடிகை மீஷா கோஷல் ட்வீட்டியுள்ளார்.

கட்சி

எப்பொழுதும் ஒரே கட்சி... நான் ஓவியா கட்சி என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ரீப்ரியா.

சதீஷ்

கமல் சார் படங்களில் நிறைய விஷயம் இருந்தாலும் ஒருத்தர் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பாத்து கட்டிப்பிடி வைத்தியம் மட்டும் கத்துக்கிட்டார். யார் அவர் என்று சினேகனை கலாய்த்துள்ளார் நகைச்சுவை நடிகர் சதீஷ்.

ஜூலி

சண்முகியாக ஜூலி. கமல் சாரை ஏன் தண்டிக்கணும். கடவுளே என்று நடிகரும், டான்ஸருமான சதீஷ் தெரிவித்துள்ளார்.

ஓவியா

பிக் பாஸ் வீட்டில் ஓவியா நடிக்கவில்லை என்பது தெளிவாகிறது. ஏனென்றால் நடிப்பதற்கு வசனம் ப்ராம்ப்ட் செய்ய வேண்டும் #Oviya Army #Oviya Navy🎉 என்கிறார் நடிகர் கருணாகரன்.

English summary
Actress Meesha Goshal tweeted that she has got addicted to Big Boss Tamil relaity show.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil