For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பீட்டருடன் சேர முயற்சிக்கிறேனா.. எனக்கு அதிர்ஷ்டம் அவ்ளோதான்.. வனிதா அதிரடி விளக்கம்!

  |

  சென்னை: பீட்டர் பால் தன்னை விரட்டி விட்டதாக வெளியான தகவல் குறித்த நடிகை வனிதா விளக்கம் அளித்துள்ளார்.

  நடிகை வனிதா கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்வரை மூன்றாவது திருமணம் செய்தார். தனது யூட்யூப் சேனலுக்காக பணியாற்றிய போது பீட்டர் பாலுடன் வனிதாவுக்கு காதல் மலர்ந்தது.

  இதனை தொடர்ந்து இருவரும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். பீட்டர் பாலுடனான திருமணத்திற்கு பிறகு அடிக்கடி செய்திகளில் அடிப்பட்டார் வனிதா.

  கனடா மாப்பிள்ளையை கல்யாணம் பண்ண போறாரா லாஸ்லியா.. வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்!

  எதிர்த்த வனிதா

  எதிர்த்த வனிதா

  அவரது முதல் மனைவி தனது கணவரை மீட்டுத் தருமாறு புகார் அளித்ததை தொடர்ந்து வனிதாவின் திருமணம் பெரும் விவாத பொருளானது. பீட்டர் பாலுக்காக திரை பிரபலங்கள் பலரையும் எதிர்த்தார் நடிகை வனிதா.

  தோற்று போய்விட்டேன்

  தோற்று போய்விட்டேன்

  இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பீட்டர் பாலை நம்பி ஏமாந்துவிட்டேன். அவரால் தோற்று போய்விட்டேன். பீட்டர் பாலுக்கு ஏன் மீது இருக்கும் அன்பை விடவும் சரக்கு மீது தான் அதிக விருப்பம், மீண்டும் குடிக்க தொடங்கி விட்டார்.

  பிரிந்துவிட்டோம்

  பிரிந்துவிட்டோம்

  ஆகையால் இருவரும் பிரிந்துவிட்டோம் என கூறி கதறல் வீடியோவை வெளியிட்டார். எலிசபெத் ஹெலனே பீட்டரை வைத்துக் கொள்ளட்டும் எனக்கு தேவையில்லை என்றும் கூறியிந்தார். அவரது வீடியோ பெரும் வைரலானது.

  விரட்டிய பீட்டர்?

  விரட்டிய பீட்டர்?

  இந்நிலையில் அண்மையில் வனிதா தனது யூட்யூப் சேனலுக்காக மீண்டும் பீட்டர் பாலை சந்தித்ததாகவும், ஆனால் பீட்டர் பால், எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு இங்க வந்த, என் முகத்திலேயே முழிக்காத என கூறி அவரை அடிக்க பாய்ந்ததாகவும் செய்திகள் வெளியானது.

  வதந்திகள்..

  வதந்திகள்..

  இந்நிலையில் நடிகை வனிதா இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, எனது அனைத்து நலம் விரும்பிகளுக்கும் ஊடக நண்பர்களுக்கும்..ஒரு ஆதாரமற்ற வதந்தி பரப்படுகிறது. அதாவது நான் அழைக்க சென்றதாகவும் என்னை நிராகரித்ததாகவும் வதந்திகள் பரவி வருகிறது.

  யாரும் ரிஜெக்ட் பண்ணல

  யாரும் ரிஜெக்ட் பண்ணல

  இதுபோன்ற மாயைகளில் மாய்த்துக்கொள்வதை தயவு செய்து தவிர்க்கவும். என் வாழ்க்கையில் நான் யாராலும் நிராகரிக்கப்பட்டதில்லை. நான் தான் யாரையாவது நிராகரித்திருப்பேன். எனது கடந்தகால உறவுகளில் சில விஷயங்களை சரி செய்ய நான் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன், நிறைய முட்டாள்தனங்களை முன்வைத்தேன்.

  பொய்யான வாழ்க்கை

  பொய்யான வாழ்க்கை

  ஆனால் தாங்கமுடியாத ஒரு கட்டத்திற்குப் பிறகு மேலும் பொறுத்துக்கொள்ள முடியாமல் வெளியேற வேண்டியிருந்தது.. நான் ஒரு பொய்யான வாழ்க்கையை வாழ முடியாது, நான் அவ்வாறு வளரவில்லை.. எனவே உங்கள் கற்பனையை குறைக்கவும்

  அவரிடம் பேசினேன்

  அவரிடம் பேசினேன்

  எங்களின் பிரேக்கப் வீடியோவுக்குப் பிறகு நாங்கள் பேசினோம். அவர் வளர்ந்துவிட்டார், அவர் தேர்வு செய்துவிட்டார். தெளிவாக என்னால் அதோடு வாழ முடியாது.. ஆச்சரியப்படும் விதமாக அவரது மனைவியோ அல்லது அவரது குழந்தைகளோ அவர்கள் கூறியது போல் அவரை திரும்பப் பெற விரும்பவில்லை..அதனால் இப்போது நீங்கள் உண்மையை அறிவீர்கள்.. நான் அப்பாவியாகவும் முட்டாளாகவும் காட்டப்பட்டேன்.. காதலில் முட்டாலாக இருந்துள்ளேன்.

  உணர்ச்சியற்றவையாகிவிட்டன

  உணர்ச்சியற்றவையாகிவிட்டன

  காதலில் என் அதிர்ஷ்டத்தை நான் புரிந்துகொண்டேன் எனது வேலை மற்றும் எதிர்கால திட்டங்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். தயவுசெய்து இதை மேலும் ஊகித்து விவாதிப்பதை நிறுத்துங்கள்.. நான் அவருடன் சட்டரீதியான உறவிளோ உணர்ச்சிகரமான உறவிளோ இல்லை.. என் உணர்ச்சிகள் உணர்ச்சியற்றவையாகிவிட்டன. நான் என் வலியை என் வழியில் கையாள்கிறேன்..

  Vanitha Vijaykumar Politics Entry | BJP • Bigg Boss Tamil | Filmibeat Tamil
  பாஸிட்டிவிட்டியுடன் தொடரும்

  பாஸிட்டிவிட்டியுடன் தொடரும்

  அனைத்து அன்பிற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.. எனது பயணம் பாஸிட்டிவிட்டியுடன் தொடரும்.. மேலும் உங்கள் ஆசீர்வாதங்களுடன் என்னை சிறந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லும்.. லவ் யூ ஆல்.. இவ்வாறு நடிகை வனிதா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  English summary
  Actress Vanitha clarifies about the rumour with Peter paul. She refused that Peter paul rejected her. she said I have no legal ties or emotional ties with him.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X