twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாவை விட்டு போக முடிவு செய்தேன்! உண்மையை போட்டு உடைத்த ரஜினி இயக்குநர்

    |

    சென்னை : தமிழைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் பல படங்களை இயக்கி அங்கும் பிரபலமான இயக்குனராக உள்ளார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்

    துப்பாக்கி,கத்தி,சர்க்கார் என விஜய்க்கு தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தவர்

    கடைசியாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான தர்பார் படத்தை இயக்கியிருந்த ஏ ஆர் முருகதாஸ் தான் சினிமாவை விட்டு போக முடிவு செய்ததாக பேசியுள்ளார்.

    நம் வாழ்க்கைக்கு ஆண்கள் தேவையில்லை… என்ன பவானி இப்படி சொல்லிடீங்க!நம் வாழ்க்கைக்கு ஆண்கள் தேவையில்லை… என்ன பவானி இப்படி சொல்லிடீங்க!

    நம்பிக்கை இயக்குனர்

    நம்பிக்கை இயக்குனர்

    அஜித் குமாரின் தீனா படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். தீனா திரைப்படம் அஜித்திற்கு முருகதாஸுக்கும் மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. முதல் படத்திலேயே மாஸ் காட்டிய ஏ ஆர் முருகதாஸ் அதைத் தொடர்ந்து விஜயகாந்தின் ரமணா, சூர்யாவின் கஜினி உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களின் நம்பிக்கை இயக்குனர் இடத்தைப் பெற்றார்

    சக்சஸ் பெறவில்லை

    சக்சஸ் பெறவில்லை

    தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற கஜினி படத்தை இந்தியில் ஆமீர் கானை வைத்து இயக்கி இந்தியிலும் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. கஜினி படத்திற்கு பிறகு பாலிவுட்டிலும் ஏ ஆர் முருகதாஸின் மார்க்கெட் வேற லெவல் உயர்ந்தது.

    சூர்யாவுடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்த ஏழாம் அறிவு திரைப்படம் கமர்ஷியல் ரீதியாக மிகப்பெரிய சக்சஸ் பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றது

    ஹாட்ரிக் வெற்றி

    ஹாட்ரிக் வெற்றி

    விஜய் உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்த துப்பாக்கி 100 கோடியை வசூல் செய்து பாக்ஸ் ஆபீசை தெறிக்க விட்டது. விஜயின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வசூலை அள்ளிய முக்கிய படமாக துப்பாக்கி பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்தது. துப்பாக்கி வெற்றியைத் தொடர்ந்து விஜய்யுடன் கூட்டணி அமைத்த ஏ ஆர் முருகதாஸ் கத்தி மற்றும் சர்கார் என தொடர்ந்து பயணித்து ஹாட்ரிக் வெற்றி கைகொடுத்தார்.

    சமூக கருத்தை முக்கியமாக

    சமூக கருத்தை முக்கியமாக

    ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களில் கமர்ஷியல் மசாலாக்கள் அதிகமாக இருந்தாலும் அதில் கட்டாயமாக ஏதாவது ஒரு சமூக கருத்தை முக்கியமாக வைத்திருப்பார்.இந்த ஃபார்முலாவை தனது ஒவ்வொரு படங்களிலும் பயன் படுத்தும் ஏ ஆர் முருகதாஸ் கடைசியாக ரஜினிகாந்தின் தர்பார் படத்தை இயக்கியிருந்தார் இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சுமாரான வெற்றியை சந்தித்தது.

    சினிமாவை விட்டு போக முடிவு

    சினிமாவை விட்டு போக முடிவு

    அந்த நிலையில் அடுத்ததாக மீண்டும் விஜயுடன் முருகதாஸ் இணைய இருப்பதாக கூறப்படும் நிலையில் இயக்குனர் சங்க தேர்தலில் ஆர்கே செல்வமணி அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து அதில் பேசிய ஏ ஆர் முருகதாஸ்.. ஒரு கட்டத்தில் சினிமாவில் என்னால் போராட முடியவில்லை சினிமாவை விட்டு போக முடிவு செய்தேன். அந்த முடிவை ஆர்கே செல்வமணி இடம் போனில் கூறியபோது சினிமாவில் எல்லா போராட்டமும் வரும் இது என்ன லைப்ரரியா சாப்பாடு கொண்டுவந்து புக்க படிச்சிட்டு போறதுக்கு, இது என்ன பூங்காவா தினமும் வந்து பூக்களை ரசித்து விட்டு போறதுக்கு இது ஒரு போர்க்களம் எதிர்ப்பு வரத்தான் செய்யும் அதை எதிர்த்துப் போராடு போராடி நின்னு வா அதையெல்லாம் விட்டுவிட்டு சினிமாவை விட்டுப் போறேன்னு சொன்னா எப்படி என எனக்குள் இருந்த போராட்ட குணத்தை தூண்டியவர் இயக்குனர் ஆர் கே செல்வமணி தான் என அந்த மேடையில் ஏ ஆர் முருகதாஸ் பேசியுள்ளார்.

    English summary
    I have Planned to quit cinema at that time says director ar murugadoss
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X