»   »  கவுதம் மேனன் சொன்னது எல்லாம் பொய், என்னிடம் ஆதாரம் உள்ளது: கார்த்திக் நரேன்

கவுதம் மேனன் சொன்னது எல்லாம் பொய், என்னிடம் ஆதாரம் உள்ளது: கார்த்திக் நரேன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கவுதம் மேனன் செய்த செயலுக்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக இயக்குனர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் கவுதம் மேனன், கார்த்திக் நரேன் இடையேயான பிரச்சனை பற்றி தான் கோலிவுட்டில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு படம் மட்டுமே ரிலீஸான நிலையில் கார்த்திக் துணிச்சலாக பேசியுள்ளார்.

கவுதம் மேனனுடனான பிரச்சனை குறித்து கார்த்திக் நரேன் கூறியிருப்பதாவது,

மன்னிப்பு

மன்னிப்பு

கவுதம் மேனன் சார் அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் மனதை புண்படுத்தும்படி நாங்கள் ஏதாவது கூறியிருந்தால் நாங்களும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.

இயக்குனர்

இயக்குனர்

மனவருத்தத்தில் தான் நான் பேசினேன். இயக்குனர்- இயக்குனர் உறவு என்பதை விடுங்க ஒரு சாதாரண மனிதரை நடத்த ஒரு முறை இருக்கு அல்லவா? கவுதம் மேனன் சார் இந்த துறையில் சீனியர், தமிழ் பட தயாரிப்பாளர் சங்கத்தின் துணை தலைவர் தன் கையில் பவர் இருப்பதை வைத்து அடுத்தவர்களை கஷ்டப்படுத்தக் கூடாது.

எனை நோக்கி பாயும் தோட்டா

எனை நோக்கி பாயும் தோட்டா

நரகாசூரன் படத்தை விட துருவ நட்சத்திரம் மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களின் பட்ஜெட் 7 முறை பெரிது என்று கவுதம் சார் கூறியதை நான் ஒப்புக் கொள்கிறேன்.

பணம்

பணம்

நரகாசூரன் படத்தை காட்டி பணம் வாங்கி அதை துருவ நட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா படங்களில் முதலீடு செய்யவில்லை என்று அவர் கூறுவதில் உண்மை இல்லை. என்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

என் படத்தை காட்டி அவர் யாரிடம் பணம் வாங்கினாரோ அவர்கள் எனக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்கள். நானும், ஷ்ரத்தா என்டெர்டெயின்மென்ட்டும் தான் தயாரிப்பாளர்கள், கவுதம் சாருக்கு இதில் தொடர்பு இல்லை என்பதை நிரூபிக்கவே இந்த போராட்டம்.

தயாரிப்பு

தயாரிப்பு

கவுதம் சாரால் பணம் முதலீடு செய்ய முடியவில்லை என்பதால் என்னை பத்ரி சாரிடம் அழைத்துச் சென்றார். உண்மையில் பத்ரி சார் தான் இந்த படத்தின் தயாரிப்பாளர். படத்தலைப்பு அவரின் ஷ்ரத்தா என்டர்டெயின்மென்ட் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தடை உத்தரவு

தடை உத்தரவு

நரகாசூரன் படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியது பற்றி கவுதம் தனது அறிக்கைகளில் தெரிவித்தாரா? கவுதம் சாரின் முந்தைய படங்களின் முதலீட்டாளாரன புண்ணியமூர்த்தி நரகாசூரனுக்கு எதிராக ஸ்டே ஆர்டர் வாங்கியுள்ளார்.

பிரச்சனை

பிரச்சனை

2012ம் ஆண்டில் புண்ணியமூர்த்தியிடம் இருந்து கவுதம் சார் வாங்கிய பணத்தை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை. அதற்காக என் படத்திற்கு ஸ்டே வாங்கிவிட்டார் புண்ணியமூர்த்தி. இது போன்ற பிரச்சனையை அனைத்து படங்களும் எதிர்கொள்கிறதா என்று கார்த்திக் நரேன் கேட்டுள்ளார்.

English summary
Director Karthick Naren said that he has proofs that Gautham Menon pledged his movie Naragasooran and invested in Dhruva Natchathiram and Enai Noki Paayum Thota.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X