»   »  எம் பொண்ணு போதைக்கு அடிமையா?: நடிகை சார்மியின் தந்தை பேட்டி

எம் பொண்ணு போதைக்கு அடிமையா?: நடிகை சார்மியின் தந்தை பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சார்மிக்கும், போதைப் பொருள் விஷயத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகைகள் சார்மி, முமைத் கான் உள்ளிட்ட தெலுங்கு திரையுலகை சேர்ந்த 15 பேருக்கு தெலுங்கானா போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து சார்மியின் தந்தை தீப் சிங் உப்பல் கூறியிருப்பதாவது,

சார்மி

சார்மி

என் மகளுக்கு இது போன்ற புகார்களை எதிர்கொள்ள நேரம் இல்லை. எனக்கு என் மகளை பற்றி நன்கு தெரியும். அவர் 13 வயதில் இருந்தே வேலை பார்த்து வருகிறார். தற்போதும் சினிமா துறையில் வெற்றிகரமானவராக உள்ளார்.

சினிமா

சினிமா

போதைப் பொருள் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் என் மகளால் இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் வெற்றிகரமானவராக இருக்க முடியாது.

உழைப்பு

உழைப்பு

சார்மி தனது கடின உழைப்பால் தான் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளார். அவர் வேலை பார்க்கத் துவங்கியதில் இருந்தே குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார்.

கவலை

கவலை

போதைப் பொருள் புகாரை கேட்டு என் மகள் இதயம் நொறுங்கிப் போயுள்ளார். புகார் கூறும் முன்பு யோசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சார்மி தற்போது பைசா வசூல் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வளவு தான் என்றார் சிங்.

English summary
Charmme Kaur's father Deep Singh Uppal said that his actress daughter doesn't have any connection with the drugs scandal.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil