வந்தியத்தேவன் அண்ணனா பிறந்துட்டு பட்ற பாடு இருக்கே..கார்த்தியை கலாய்த்த சூர்யா..அங்கீகரித்த ராதிகா
சூர்யாவின் 25 ஆம் ஆண்டு திரையுலக பயணத்தை வாழ்த்தி கார்த்தி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். சோதனைகளை சாதனைகளாக்கியவர் சூர்யா என வாழ்த்தியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கிண்டலாக கார்த்தியின் வந்திய தேவன் பார்ட்டை குறிப்பிட்டு வந்தியதேவனுக்கு அண்ணனாக பிறந்துட்டு பட்ற பாடு எனக்குத்தான் தெரியும் என்று சூர்யா கிண்டலடித்துள்ளார்.
ஆமா, ஆமா என ராதிகா அதை ஆமோதித்து சூர்யாவுடன் சேர்ந்து கார்த்தியை கலாய்த்துள்ளார்.

நல்ல பெயரை வாங்கிய நடிகர் சிவகுமார்..தமிழ் மீதுள்ள பற்று
நடிகர் சிவகுமாரின் திரை வாழ்க்கையில் மிக ஒழுக்கமான மனிதர் என பெயரெடுத்தார். சிவாஜி கணேசனின் செல்லப்பிள்ளையாக திரையுலகில் இருந்த சிவகுமார் திரையுலகில் எவ்வித சர்சையிலும் சிக்காமல் இருந்தார். பொதுவாழ்வில் அவர் சிறந்த மேடைப்பேச்சாளர். இலக்கியங்களை ஆழ்ந்து படித்தவர். தமிழுணர்வு மிக்கவர். இப்படிப்பட்டவருக்கு 2 மகன்கள், ஒரு மகள். சினிமா நடிகர் வீட்டு பிள்ளைகளாக அவர்களை வளர்க்காமல் சராசரி மனித வாழ்க்கையை உணரவேண்டும் என வாழ்க்கை நெறிகளை கற்று கொடுத்தார் சிவகுமார்.

நடிகரின் பிள்ளைகளாக இல்லாமல் மாணவர்களாக படித்த சூர்யா-கார்த்தி
படிப்பு முக்கியம் என்பதால் இருவரும் படித்தனர். சினிமா நடிகரின் மகனாக இல்லாமல் மாணவர்களாக படித்தனர். அதிலும் கார்த்தி அமெரிக்காவில் படித்தார். ஆனாலும் இருவரும் தந்தைக்கு அடங்கிய பிள்ளைகள். இருவரும் படிக்கும்போது தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டதை கார்த்தி சமீபத்தில் பேட்டியில் தெரிவித்திருந்தார். மோட்டார் பைக்குக்கு சண்டை, டிரஸ்ஸுக்கு சண்டை, சூர்யா வெளியில் போய்விட்டு லேட்டாக வந்தால் நைசாக அப்பாவிடம் போட்டுவிடுவது என பல கூத்துகள் இருவர் வாழ்க்கையிலும் நடந்துள்ளது.

மோட்டார் சைக்கிளை தூக்கிச் சென்ற சூர்யா
தனக்கு பரிசாக கிடைத்த மோட்டார் சைக்கிளை சூர்யா வாரம் முழுவதும் எடுத்து சுற்ற லீவு நாள் ஒருநாள் மோட்டார் சைக்கிளை கழுவி வெளியில் எடுத்துச் செல்லலாம் என்று தயாராகும் போது அன்றும் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றுவிடுவார் என்று கார்த்தி சொல்லியிருந்தார். சூர்யா தவறு செய்யும்போது வீட்டின் மூத்த பிள்ளை என்பதால் தந்தையின் அதீத கண்டிப்பு இருந்தது என்றும், அதே தனது காலத்தில் அப்பா அவ்வளவாக கண்டுக்கொள்ளாமல் விட்டதாக தெரிவித்திருந்தார்.
Karthi's Message To Suriya On 25 Years In Films Gets A Cheeky Reply From Actor - UN STORE

அண்ணன் சூர்யாவின் நல்ல மனதை பாராட்டிய கார்த்தி
தற்போது இருவரும் திரையுலகில் கால்பதித்து வெற்றிகரமான நடிகர்களாக உள்ளனர். சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்த விருமன் வெற்றிகரமாக ஓடுகிறது. சூர்யாவின் வாடிவாசல் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் சூர்யாவின் 25 ஆம் ஆண்டு திரை வாழ்க்கையை பாராட்டி தம்பி கார்த்தி வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் " அவர் தனது ஒவ்வொரு மைனஸையும் தனது மிகப்பெரிய பிளஸ் ஆக மாற்றுவதற்காக இரவும் பகலும் உழைத்தார். அவர் தனது சொந்த சாதனைகளை முறியடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார். பெரிய இதயமுள்ள மனிதரான சூர்யா ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையை மாற்ற தனிநபராக மேலும் தனது மனதை விசாலமாக்கி உழைக்கிறார். அது என் சகோதரன் !#25YearsOfCultSuriyaism" என பாராட்டியுள்ளார்.

வந்திய தேவா, அண்ணனா பொறந்துட்டு..கலாய்த்த சூர்யா
இதற்கு பதில் அளித்துள்ள சூர்யா வந்தியத்தேவா! அண்ணணா பொறந்துட்டு பட்ற பாடு இருக்கே!! என ஸ்மைலி ஃபேஸ் போட்டுள்ளார். அதை டேக் செய்து நடிகை ராதிகா சரத்குமார் ஹாஹா எனக்கு இந்த ஃபீலிங் புரிகிறது, ஆனால் நீங்கள் விதிவிலக்கானவர் என சூர்யாவை பாராட்டியுள்ளார். சினிமா நடிகர்கள் வாழ்க்கை வீண் பகட்டாக இருக்கும். அப்பா மகன் உறவில் கூட உண்மையில்லாததை பார்க்கையில் அண்ணன் தம்பிகள் ஒற்றுமையுடன் இருப்பது தந்தையின் வளர்ப்பை உணர்த்துவதாக நெட்டிசன்கள் வாழ்த்துகின்றனர்.


Click it and Unblock the Notifications











