»   »  நான் பத்திரிகையாளராக இருந்தால் சல்மானை பார்த்து 'அந்த' கேள்வியை கேட்பேன்: லேடி ரஜினி

நான் பத்திரிகையாளராக இருந்தால் சல்மானை பார்த்து 'அந்த' கேள்வியை கேட்பேன்: லேடி ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தான் பத்திரிகையாளராக இருந்தால் சல்மான் கானிடம் என்ன கேள்வி கேட்பேன் என்பதை நடிகை சோனாக்ஷி சின்ஹா தெரிவித்துள்ளார்.

சல்மான் கானின் தபாங் படம் மூலம் ஹீரோயின் ஆனவர் சோனாக்ஷி சின்ஹா. அவர் நூர் என்ற படத்தில் பத்திரிகையாளராக நடித்துள்ளார். சுனில் சிப்பி இயக்கியுள்ள இந்த படத்தில் நூராக வருகிறார் சோனாக்ஷி.

அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

பத்திரிகையாளர்

பத்திரிகையாளர்

நிஜத்தில் நீங்கள் பத்திரிகையாளராக இருந்தால் உங்களின் தந்தை நடிகர் சத்ருகன் சின்ஹா மற்றும் சல்மான் கான் ஆகியோரிடம் என்ன கேள்வி கேட்பீர்கள் என்று சோனாவிடம் கேட்கப்பட்டது.

அப்பா

அப்பா

என் அப்பாவிடம் கேள்வி கேட்க வேண்டும் என்றால் காமோஷ் என்ற பதிலை அவர் சொல்ல முடியாத கேள்வியை நிச்சயம் கேட்பேன் என சோனாக்ஷி தெரிவித்துள்ளார்.

சல்மான்

சல்மான்

சல்மான் கானிடம் பல ஆண்டுகளாக பலரும் மீண்டும் மீண்டும் கேட்கும் அதே கேள்வியை தான் நானும் கேட்பேன் என்கிறார் சோனாக்ஷி சின்ஹா.

திருமணம்

திருமணம்

சல்மான் கானிடம் உங்களுக்கு திருமணம் எப்பொழுது என்ற கேள்வியை தான் பலரும் பல காலமாக கேட்கிறார்கள். இந்நிலையில் சல்மானின் காதலியான லூலியா அவரை விரைவில் திருமணம் செய்ய விரும்புவதாக கூறப்படுகிறது.

English summary
Bollywood actress Sonakshi Sinha said that she will ask Salman Khan the same question everybody is asking him all these years.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil