’மான நஷ்ட வழக்கு போடுவேன்’..அவதூறாக பேட்டி அளித்த பயில்வான் ரங்கநாதன்..ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி ஆவேசம்

தன்னைப்பற்றியும், வைரமுத்து பற்றியும் தவறாக பேட்டி அளித்த பயில்வான் ரங்கநாதனை சாக்கடை என விமர்சித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி.

வைரமுத்து பொன்னியின் செல்வன் படத்தில் பாட்டு எழுதாதற்கு காரணம் பற்றி அவர் அளித்த பேட்டியில் தேவையில்லாமல் தன்னை இழுத்துள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவதூறாக தன்னைப்பற்றி பேட்டி அளித்த பயில்வான் ரங்கநாதன் ஒரு சாக்கடை, அதற்குள் கைவிட முடியாது, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க போகிறேன் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 சினிமாவில் அந்தரங்க செய்திகளுக்கு எப்போதும் மவுசு அதிகம்

சினிமாவில் அந்தரங்க செய்திகளுக்கு எப்போதும் மவுசு அதிகம்

திரையுலகம் மர்மம் நிறைந்த ஒன்று. பலகோடிகள் புரளும் இத்துறையில் முன்னுக்கு வர பலரிடமும் போட்டி இருக்கும். பெண்களை போகப்பொருளாக நினைக்கும் திரையுலகில் திரைமறைவில் நடக்கும் விவகாரங்கள் ரசிகர்கள் தெரிந்துக்கொண்டால் பிறகு அபிமான நட்சத்திரங்கள் இமேஜ் அம்புடுதேன். இதை தெரிந்துக்கொள்ள ரசிகர்கள் எப்போதுமே ஆவலாக இருப்பார்கள். இதனால் இத்தகைய செய்திகளுக்கு எப்போதுமே அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை மவுசு உண்டு. லட்சுமி காந்தன் என்கிற எழுத்தாளர் இப்படித்தான் பாகவதர் பற்றியும், என்.எஸ்.கே பற்றியும் செய்தி எழுதி பின்னர் அவர் கொலை செய்யப்பட இந்த விவகாரத்தில் பாகவதரும், என்.எஸ்.கேவும் கைது செய்யப்பட்டது வரலாறு.

 சர்ச்சைப்பேட்டியின் மொத்த குத்தகைதாரர் பயில்வான் ரங்கநாதன்

சர்ச்சைப்பேட்டியின் மொத்த குத்தகைதாரர் பயில்வான் ரங்கநாதன்

இதேப்போன்றதொரு ட்ரெண்டை கையிலெடுத்து பணம் பார்த்து வருகிறார் பயில்வான் ரங்கநாதன். அந்தகாலத்திலிருந்து திரையுலகில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருபவர். அதே நேரம் பத்திரிக்கையாளராகவும் இருந்துள்ளார். இந்த அனுபவங்களை நவீன யூடியூப் காலத்தில் தான் பார்த்தது கேட்டது என திரையுலக பிரபலங்களின் அந்தரங்கங்களை பற்றி பேசி பணம் பார்க்கிறார். இவரிடம் எதற்கு வம்பு என சம்பந்தப்பட்டவர்கள் ஒதுங்குவது இவருக்கு வாய்ப்பாக அமைய மேலும் மேலும் பேசி வருகிறார். பாதிக்கப்பட்டவர்கள் இவர் மீது புகார் அளிக்காதது இவருக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. பெண்கள் குறித்து அவதூறு என்பது சாதாரணமாக இஅவரது பேட்டியில் இருக்கும்.

 வைரமுத்துவின் மீது அவதூறை பொழிய ரஹ்மான் சகோதரியை வம்பிழுத்த பயில்வான்

வைரமுத்துவின் மீது அவதூறை பொழிய ரஹ்மான் சகோதரியை வம்பிழுத்த பயில்வான்

இப்படி இவர் சமீபத்தில் அளித்த பேட்டியால் சர்ச்சையில் சிக்கி வழக்கை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறார். வைரமுத்து பற்றி பேசுகிறேன் என அவர்மீது வன்மத்தை கொட்டும் வகையில் பேசிய பயில்வான் ரங்கநாதன் சின்மயின் அவர் மீது புகார் கொடுத்ததை மீண்டும் சொல்லி நான் சொல்லவில்லை சின்மயி சொன்னார் என பதிவு செய்கிறார். வைரமுத்து மீது அவதூறு செய்யவேண்டும் என்கிற நோக்கத்தில் பொன்னியின் செல்வனில் வைரமுத்து பாட்டு எழுதாததற்கு காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் அவர் என் சகோதரியிடம் ஒழுங்கீனமாக நடந்துக்கொண்டார், அவரை பாட்டெழுத அழைத்தால் நான் இசையமைக்க மாட்டேன் என மறுத்ததால் வைரமுத்துவை பாட்டெழுத அழைக்க வில்லை என பேட்டி அளித்திருந்தார்.

 மரியாதையானவர் வைரமுத்து..பயில்வான் மீது வழக்கு தொடர உள்ளதாக ரஹ்மான் சகோதரி தகவல்

மரியாதையானவர் வைரமுத்து..பயில்வான் மீது வழக்கு தொடர உள்ளதாக ரஹ்மான் சகோதரி தகவல்

எதையோ சொல்கிறேன் என தேவையில்லாமல் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரியை அவதூறு செய்யும் விதமாக ஆதாரமில்லாமல் பயில்வான் ரங்கநாதன் கூறியதால் ரஹ்மானின் சகோதரி கடும் ஆத்திரம் அடைந்துள்ளார். பயில்வான் ரங்கநாதனை சாக்கடை என திட்டியுள்ள அவர், சாக்கடைக்குள் தெரிந்தே யாரும் கைவிட மாட்டார்கள், பயில்வானின் பேட்டி அப்படித்தான் உள்ளது. வைரமுத்து மிகுந்த மரியாதையுடன் நடந்துக்கொள்பவர், என்னிடம் 10 அடி தள்ளி நின்றுதான் பேசுவார். என் இசைக்கு பாடலைக்கூட அவர் செல்போனில் தான் அனுப்புவார். ரஹ்மான் பொன்னியின் செல்வனில் வைரமுத்துவை பயன்படுத்துவதும், நிராகரிப்பதும் அவர்கள் பிரச்சினை இதில் என்னை ஏன் இவர் இழுக்க வேண்டும். இது பற்றி பயில்வான் ரங்கநாதன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்போகிறேன் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X