»   »  எந்த பெண்ணையாவது முத்தமிட்டால் உதட்டை கிழிச்சிடுவேன்: மகனை மிரட்டிய நடிகர்

எந்த பெண்ணையாவது முத்தமிட்டால் உதட்டை கிழிச்சிடுவேன்: மகனை மிரட்டிய நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: என் மகன் எந்த பெண்ணுக்காவது முத்தம் கொடுத்தால் அவனின் உதட்டை கிழித்துவிடுவேன் என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஒரு பக்கம் நடித்து சம்பாதிக்கிறார். மறுபக்கம் அவரின் மனைவி கவுரி இன்டீரியர் டிசைனிங் செய்து சம்பாதிக்கிறார். பணத்தால் குழந்தைகள் வழிதவறி சென்றுவிடக் கூடாது என்பதில் ஷாருக் உறுதியாக உள்ளார்.

இந்நிலையில் குழந்தைகள் பற்றி ஷாருக்கான் கூறியிருப்பதாவது,

ஆர்யன்

ஆர்யன்

என் மகன் ஆர்யன் எந்த பெண்ணையாவது முத்தமிட்டால் அவன் உதடுகளை கிழித்துவிடுவேன். பெண்ணின் உதடை கிழிப்பது சரி அல்ல. அதனால் அந்த பெண்ணின் தந்தையின் சார்பில் என் மகனின் உதட்டை கிழிப்பேன்.

பெண்கள்

பெண்கள்

எந்த பெண்ணையும் தொடவோ, காயப்படுத்வோ கூடாது. பெண்களை மதிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். அதில் நான் உறுதியாக உள்ளேன்.

சுஹானா

சுஹானா

ஷாருக்கான் தனது 17 வயது மகள் சுஹானா விஷயத்தில் மிகவும் கவனமாக உள்ளார். சுஹானாவுக்கு எந்த பையனாவது முத்தம் கொடுத்தால் அவரின் உதடுகளை கிழிப்பேன் என்று காபி வித் கரண் நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

வீடியோ

ஷாருக்கானின் மகன் ஆர்யனும், பெரிய இடத்து வீட்டு பெண்ணும் காரில் ஏதேதோ செய்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Shahrukh Khan said that he'd rip off Aryan Khan's lips if he ever kisses a girl and will do a big favour to the girl's father. Well, of course SRK meant it in a funny way with his unique metaphor and that shows how much he really respects women!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil