»   »  படத்தில் நடிக்கிறேன், என் ஹீரோயின் நயன்தாரா: சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் அறிவிப்பு

படத்தில் நடிக்கிறேன், என் ஹீரோயின் நயன்தாரா: சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹீரோவாகப் போவதாகவும், தனக்கு ஜோடி நயன்தாரா என்றும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் திரையுலக பிரபலங்கள் வருவது புதிது அல்ல. இந்நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணனே விளம்பரத்தில் நடிக்க வந்தார்.

தனது கடையின் பிராண்ட் அம்பாசிடரான சரவணன்.

தமன்னா, ஹன்சிகா

தமன்னா, ஹன்சிகா

கோலிவுட்டின் இரண்டு இளம் ஹீரோயின்களான தமன்னா, ஹன்சிகாவுடன் விளம்பரப் படத்தில் வந்தார் சரவணன். விளம்பரத்தில் நடனம் ஆடவும் முயற்சி செய்திருந்தார். இந்நிலையில் அவர் சோலோவாக ஹேர்ஸ்டைலை மாற்றி புதிய விளம்பரத்தில் வருகிறார்.

மீம்ஸ்

மீம்ஸ்

சரவணனை விளம்பரத்தில் பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து மீம்ஸ் போட்டனர். கடன் வாங்கியாவது உன் கடையில துணி வாங்குறேன்யா ஆனால் தயவு செய்து விளம்பரத்தில் மட்டும் நடிக்காதையா என்று மீம்ஸ் போடப்பட்டது.

ஆதரவு

ஆதரவு

விளம்பரத்தில் சரவணன் வந்ததை பார்த்த சிலர் உழைப்பால் முன்னேறியவர் அவர் கடையை விளம்பரப்படுத்த விளம்பர படத்தில் நடிப்பதில் என்ன தவறு என்று கேட்டு அவருக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தனர்.

ஹீரோ

ஹீரோ

திருச்செந்தூர் முருகனை இன்று தரிசித்த சரவணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் விரைவில் படத்தில் நடிக்கவிருக்கிறேன். என் ஹீரோயின் நயன்தாரா என்றார்.

English summary
Saravana stores owner Saravanan said that he is going to act in a movie soon and Nayanthara will be the leading lady.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil