»   »  இந்த நடிகர்கள் முன்பு உட்கார வெட்கமாக இருக்கு: சிவகார்த்திகேயன்

இந்த நடிகர்கள் முன்பு உட்கார வெட்கமாக இருக்கு: சிவகார்த்திகேயன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கு உட்கார வெட்கமாக இருக்கிறது என்று காசே தான் கடவுளடா நாடகத்தின் 100வது நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகிவிட்டார் சிவகார்த்திகேயன். அவரை இசை வெளியீட்டு விழா, ட்ரெய்லர் வெளியீடு, வெற்றி விழா கொண்டாட்டங்களுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கிறார்கள்.


இந்நிலையில் அவர் ஒய்.ஜி. மகேந்திரனின் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டார்.


நாடகம்

நாடகம்

ஒய்.ஜி. மகேந்திரன் காசே தான் கடவுளடா நாடகத்தை நடத்தி வருகிறார். அந்த நாடகத்தின் 100வது நிகழ்ச்சியில் தான் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


படம்

படம்

சித்ராலயா கோபு எழுதி, இயக்கிய காசே தான் கடவுளடா சூப்பர் ஹிட் படத்தின் தழுவல் தான் ஒய்.ஜி. மகேந்திரனின் நாடகம். படத்தில் தேங்காய் சீனிவாசன் நடித்த கதாபாத்திரத்தில் நாடகத்தில் ஒய்.ஜி. நடித்து வருகிறார்.


சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

காசே தான் கடவுளடா நாடகத்தில் நடித்து வரும் அனைவரையும் பாராட்டுகிறேன். இந்த நடிகர்களுக்கு முன்பு உட்கார்ந்திருக்க வெட்கமாக உள்ளது என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
ரீடேக்

ரீடேக்

படத்தில் ரீடேக் கேட்டு நடிக்கும் சவுகரியம் உள்ளது. ஆனால் நாடக நடிகர்கள் ஒரு ரீடேக் கூட இல்லாமல் இரண்டரை மணிநேரம் நடிக்கிறார்கள். சினிமா நடிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக நாடகம் உள்ளது என்றார் சிவகார்த்திகேயன்.


English summary
Sivakarthikeyan said that he is ashamed to sit infront of drama actors as they act without retake for two and a half hours.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil