»   »  ரஜினி, விஜய்க்கு ஜோடி... நான் ஆசீர்வதிக்கப்பட்டவள்! - எமி ஜாக்ஸன்

ரஜினி, விஜய்க்கு ஜோடி... நான் ஆசீர்வதிக்கப்பட்டவள்! - எமி ஜாக்ஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியுடன் 2.ஓ, விஜய்யுடன் தெறி படங்களில் நடித்ததன் மூலம் என் கனவு நனவாகிவிட்டது. நான் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றார் நடிகை எமி ஜாக்ஸன்.

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O-வின் (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை ரூ. 350 கோடி செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்திய சினிமா வரலாற்றில் இவ்வளவு செலவழித்து எடுக்கப்படும் முதல் படம் இதுதான்.

I'm blessed, says Amy

ரஜினிக்கு வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். கதாநாயகியாக ஏமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றுகிறார்கள்.

இந்தப் படத்தில் பணியாற்றுவது குறித்து நடிகை எமி ஜாக்ஸன் கூறுகையில், "சென்ற வாரம் ரஜினி - அக்‌ஷய் குமார் தொடர்புடைய ஆக்‌ஷன் காட்சிகள் எடுக்கப்பட்டன. இதுவரை படப்பிடிப்பு மிக நல்ல அனுபவமாக உள்ளது. மே மாதம் மீண்டும் 2.0 படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன்.

இந்தப் படத்தில் ரோபோ கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை.

நான் வியந்து பார்த்த நடிகர் ரஜினிகாந்த். அவருக்கு அடுத்து நான் ஆச்சர்யமாய்ப் பார்த்தது விஜய்யை. இந்த இருவருக்கும் ஜோடியாக நான் நடித்துவிட்டேன்.

இப்போது நான் ஆசிர்வதிக்கப்பட்டவள் போல உணர்கிறேன்," என்கிறார்.

English summary
Actress Amy Jackson says that she felt that she is a blessed girl in the world.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil