twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'விஜய், சூர்யா போல் என்னால் செய்ய முடியாது'... அதர்வா முரளி ரொம்பத் தெளிவு!

    நடிகர் அதர்வா தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

    |

    Recommended Video

    Actor Atharva: பஞ்ச் வசனங்கள் பேசி நடிக்க முடியாது- அதர்வா அதிரடி- வீடியோ

    சென்னை: தன்னால் பஞ்ச் வசனங்கள் பேசி நடிக்க முடியாது என நடிகர் அதர்வா தெரிவித்துள்ளார்.

    மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா, பானா காத்தாடி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அவர் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அதர்வா முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள 100 திரைப்படம் வரும் 9ம் தேதி வியாழக்கிழமை திரைக்கு வருகிறது.

    இதையொட்டி அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

    காதலில் விழுந்த ஐஸ்வர்யா தத்தா... யாரை லவ் பண்றார் தெரியுமா? காதலில் விழுந்த ஐஸ்வர்யா தத்தா... யாரை லவ் பண்றார் தெரியுமா?

    போலீஸ் கதை

    போலீஸ் கதை

    "எல்லா ஹீரோக்களுக்கும் போலீஸ் கதையில் நடிக்கும் ஆசை இருக்கும். ஆனால் எனக்கு அதற்கான சரியான கதை அமையவில்லை. சாம் ஆண்டன் 100 கதையை சொன்னபோதே விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இருந்தது.

    100 திரைப்படம்

    100 திரைப்படம்

    100 என்ற எண்ணுக்கு போன் செய்தால், அதை அட்டென்ட் செய்யும் காவலரின் மனநிலை எப்படி இருக்கும்? அவர் உண்மையிலேயே சம்பந்தப்பட்டவருக்கு உதவி செய்வாரா? அல்லது அவருக்கு என்னென்ன சிக்கல்கள் என்பதை பற்றி சொல்லும் படம் இது. எனக்கு உண்மையிலேயே இது வித்தியாசமான கேரக்டர். சில உண்மை சம்பவங்கள் கதையில் இருக்கும். ஆனால் அவற்றை வைத்து கமர்சியலான படமாக கொடுத்து இருக்கிறோம்.

    நம்பிக்கை வரவேண்டும்

    நம்பிக்கை வரவேண்டும்

    போலீஸ் வேடத்தில் நடிக்கும்போது மற்றவர்களுக்கு என் மீது நம்பிக்கை வருவதற்கு முன்பு எனக்கு நம்பிக்கை வரவேண்டும். அதற்காக வொர்க் அவுட் செய்து பிட் ஆனேன். 100 படம் என்னால் மறக்க முடியாத படமாக இருக்கும்.

    ஹீரோயினாக ஹன்சிகா

    ஹீரோயினாக ஹன்சிகா

    ஹீரோயினாக ஹன்சிகா நடித்துள்ளார். அவர் ஒரு கால் செண்டரில் பணிபுரிவார். போலீசாக முயற்சி செய்துகொண்டு இருக்கும் நான் அவரை கிண்டல் செய்வேன். கடைசியில் நானே போலீஸ் துறையில் அதுபோன்ற ஒரு வேலையில் சேர்வேன். அது சுவாரசியமாக இருக்கும். கிளைமாக்ஸ் காட்சியில் ஹன்சிகாவுக்கு மிகவும் முக்கியத்துவம் இருக்கும். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. முதன்முறையாக சுத்தமாக தமிழ் தெரியாத ஒரு நடிகையுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது.

    பஞ்ச் டயலாக்

    பஞ்ச் டயலாக்

    இது கமர்சியல் படமாகவே இருந்தாலும், இதில் பஞ்ச் வசனங்கள் எதுவும் இருக்காது. என்னால் விஜய் சார், சூர்யா சார் மாதிரி இப்போது பஞ்ச் வசனம் பேசி நடிக்க முடியாது. அவர்கள் உயரம் வேறு.

    திருப்தி அளிக்கிறது

    திருப்தி அளிக்கிறது

    நான் தேர்வு செய்யும் கதைகள் எனக்கு திருப்தி அளித்தபிறகு தான் தேர்வு செய்கிறேன். ஆனால் வெற்றி, தோல்வி என்பது நம் கையில் கிடையாது. எல்லா படங்களையுமே உயிரை கொடுத்து தான் நடிக்கிறேன். ஒரே மாதிரியான உழைப்பை தான் தருகிறேன். சினிமா என்பது டீம் வொர்க். எனக்கு இப்போது கிடைத்துள்ள அடையாளம் என்பது நான் நடித்த படங்களால் தான் கிடைத்து இருக்கிறது", இவ்வாறு அவர் கூறினார்.

    English summary
    Actor Adharva is celebrating his birthday today. On this occassion he said to press people that, he will speak punch dialouges in his movies as of now.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X