Just In
- 1 hr ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 2 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 2 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 2 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
பிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன
- Automobiles
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரிலீஸ் ஆகும் பயோபிக்.. ஷகிலாவாக என்னை எப்படி ஏத்துக்குவாங்களோ.. பிரபல நடிகை ஆர்வம்!
சென்னை: நடிகை ஷகிலாவாக, ரசிகர்கள் எப்படி ஏற்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் என்று பிரபல நடிகை தெரிவித்து உள்ளார்.
நடிகை ஷகிலாவின் வாழ்க்கை கதை சினிமாவாகி இருக்கிறது. இதில் ஷகிலாவாக இந்தி நடிகை ரிச்சா சத்தா நடித்துள்ளார்.
பங்கஜ் திரிபாதி உட்பட பலர் நடித்துள்ளனர். கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் இயக்கியுள்ளார்.

நடிகர், நடிகைகள்
இவர் சமீபத்தில் போதை பொருள் விவகாரத்தில் பல நடிகர், நடிகைகள் பெயரை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் அளித்தவர். இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது முடிந்துவிட்டது. கொரோனாவால் ரிலீஸ் தாமதமான படங்களில் இதுவும் ஒன்று, இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் டப் ஆகி வெளியாகிறது.

சினிமா துறை
இந்தப் படம் நாளை ரிலீஸ் ஆகிறது. படம் பற்றி நடிகை ஷகிலா அளித்த பேட்டியில் சமூகத்தில் பலரால் ஏமாற்றப்பட்டேன். குடும்ப உறவினர்களிடம் ஏமாந்துள்ளேன். யாரிடமும் ஏமாந்து விட வேண்டாம் என்பதை சினிமா துறைக்கு வரும் பெண்களுக்கு கூற விரும்புகிறேன். இதைத்தான் படமாக்கி இருக்கிறார்கள்' என்று கூறியிருந்தார்.

ஆர்வமாக இருக்கிறேன்
இந்நிலையில், இந்தப் படம் மூலம் தென்னிந்திய சினிமாவிற்கு வரும் நடிகை ரிச்சா சதா படம் பற்றி கூறியிருப்பதாவது: நடிகை ஷகிலாவாக, தென்னிந்திய ரசிகர்கள் என்னை எப்படி ஏற்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். ஷகிலாவின் படங்கள் மற்றும் அவரைப் பற்றி ரசிகர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

சொந்த வாழ்க்கை
அவர் கேரக்டரை சரியாகச் செய்திருக்கிறேனா இல்லையா என்பதை ரசிகர்கள்தான் சரியாக கணிக்க முடியும் என நம்புகிறேன்' என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறும்போது, படத்தில், ஷகிலாவின் திரை வாழ்க்கையை விட சொந்த வாழ்க்கையில்தான் அதிக கவனம் செலுத்தி இருக்கிறோம்.

பொருந்த முடிந்தது
அவருடைய உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்களால் அவர் எப்படி ஏமாற்றப்பட்டார் என்பதை சொல்லி இருக்கிறோம். அந்தப் பாதிப்பை என்னோடு தொடர்புப்படுத்திக் கொள்ள முடிந்ததால், அந்த கேரக்டருடன் என்னால் பொருந்த முடிந்தது. இவ்வாறு நடிகை ரிச்சா சதா கூறியுள்ளார். இந்தப் படம் நாளை வெளியாகிறது.