»   »  நான் சாகலை, அது வேற நடிகை: வீடியோ வெளியிட்ட 'தெய்மகள் காயத்ரி'

நான் சாகலை, அது வேற நடிகை: வீடியோ வெளியிட்ட 'தெய்மகள் காயத்ரி'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கார் விபத்தில் நான் இறக்கவில்லை நலமாக உள்ளேன் என்று தெய்வமகள் தொடரில் காயத்ரியாக நடித்து வரும் ரேகா கிருஷ்ணப்பா தெரிவித்துள்ளார்.

கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் பெங்களூரை சேர்ந்த ரேகா சிந்து(22). சென்னைஸ் அமிர்தா விளம்பர படத்திலும் நடித்துள்ளார். அவர் பெங்களூரில் இருந்து காரில் சென்னைக்கு வந்துள்ளார்.

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தத்தில் கார் சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரேகா சிந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

ரேகா

ரேகா

ரேகா சிந்து பலியாக தெய்வமகள் தொலைக்காட்சி தொடரில் காயத்ரியாக நடித்து வரும் ரேகா கிருஷ்ணப்பா இறந்துவிட்டதாக செய்தி வேகமாக பரவியது.

காயத்ரி

காயத்ரி

ரேகா கிருஷ்ணப்பா கார் விபத்தில் இறந்துவிட்டதாக வெளியான தகவலை அடுத்து பலரும் அவரது செல்போனுக்கு கால் பண்ண அவரே எடுத்துப் பேசி நான் நலமாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

வீடியோ

தன்னை பற்றி தவறாக செய்தி பரவியுள்ளதை அறிந்த ரேகா கிருஷ்ணப்பா ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த பிறகே பலருக்கு உண்மை தெரிய வந்துள்ளது.

நலம்

நலம்

கோவிலில் இருந்தபடி ரேகா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, நான் விபத்தில் இறந்துவிட்டதாக வதந்தி பரவியுள்ளது. அது நான் இல்லை யாரோ ரேகா சிந்து. நான் நலமாக உள்ளேன். கோவிலுக்கு வந்துள்ளேன். பலரும் போன் செய்து கொண்டே இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Rekha Krishnappa who is better known as Deivamagal Gayathri has clarified that she is fine and the actress who died today is not her but Rekha Sindhu.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil